என்ஃபீல்டுக்கு போட்டியாக பட்டைய கிளப்பும் ஜாவா பைக்!

 

என்ஃபீல்டுக்கு போட்டியாக பட்டைய கிளப்பும் ஜாவா பைக்!

மீண்டும் சந்தைக்கு வந்துள்ள ஜாவா பைக், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பைக்கின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

மும்பை: மீண்டும் சந்தைக்கு வந்துள்ள ஜாவா பைக், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பைக்கின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

30 ஆண்டுகளுக்கு முன் இந்திய சந்தையைக் கலக்கிய ஜாவா பைக்கை தற்போது மீண்டும் தயாரித்து சந்தையில் இறக்கியுள்ளது மஹிந்ரா அண்ட் மஹிந்ரா குழுமத்தின் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம்.

இந்த பைக்கின் ஆன்லைன் புக்கிங் நடைபெற்று வருகிறது. இதில், பைக் புக்கிங் சூடு பிடித்துள்ள நிலையில், தற்போது புக் செய்பவர்களுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் பைக் டெலிவரி செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜாவா மற்றும் ஜாவா 42 என்ற இரு மாட்ர்ல்களை வெளியிட்டுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த பைக்குகளில் ஏபிஎஸ் மற்றும் டிஸ்க் பிரேக் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் ஜாவா மாடல் ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய், ஜாவா 42 மாடலின் விலை ஒரு லட்சத்து 55 ஆயிரம் ஆஉம். மேலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகள் ஒன்பதாயிரம் ரூபாய் ஆகும்.