எனக்கு 65 உனக்கு 26..! திருமணம் வேண்டாம் லிவ்விங் டூ கெதர் போதும் என்ற இளைஞருக்கு நேர்ந்த கதி!

 

எனக்கு 65 உனக்கு 26..! திருமணம் வேண்டாம் லிவ்விங் டூ கெதர் போதும் என்ற இளைஞருக்கு நேர்ந்த கதி!

இலங்கைக்கு சுற்றுலா வந்த 65 வயதுடைய ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவரை, 26 வயது இளைஞர் ஒருவர் காதலித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த 65 வயதுடைய ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவரை, 26 வயது இளைஞர் ஒருவர் காதலித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

65 வயதான டயன் டீ ஸ்காட்லாந்தில் பெரும் பணக்காரர், இவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். இலங்கையை சுற்றி காண்பிக்க தனக்கு ஒரு உள்ளூர்வாசியை தேர்வு செய்ய நினைத்த டயன் டீக்கு பிரியஞ்சன் என்ற 26 வயது இளைஞன் பழக்கமாகியுள்ளார். பிரியஞ்சனுடன் இணைந்து பல இடங்களுக்கு சென்று நன்றாக பழகியுள்ளனர். பிரியஞ்சனும் டயனிடமிருந்து நிறைய பணங்களை கைமாற்றாக வாங்கியிருந்தார். பிரியஞ்சனிடம் காதல் வசப்பட்ட டியன் அவன், சொல்வதையெல்லாம் கேட்டுள்ளார்.

இறுதியில் பிரியஞ்சனை பிரிய மனமில்லாமல் டயன் ஸ்காட்லாந்தை மறந்து இலங்கையிலேயே குடியேறினார். சிறிது காலத்திற்கு பிறகு பிரியஞ்சனிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் விபரம் டயன் டீக்கு தெரிந்தது. இருந்தாலும் பிரியஞ்சனைவிட மனமில்லாமல், ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துள்ளார். நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் பிரியஞ்சன் துப்பாக்கியில் சுட்டுக்கொல்லப்பட்டான். இதனால் டயன் மனமுடைந்து சோகத்தில் மூழ்கினார். ஆனால் பிரயஞ்சனின் நண்பர்கள், அவனுடன் இருப்பது போன்று தங்களுடனும் இருக்க வேண்டும் என டயனை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் டயன் மீண்டு ஸ்காட்லாந்துகே சென்றுவிட்டார். அதன் பின்னர் தான் பிரியஞ்சனும் தன்னிடம் காசுக்காக மட்டுமே பழகியுள்ளான் என்பது டயனுக்கு புரியவந்தது.