எனக்கு வேலை வேண்டும், உதவி செய்யுங்கள்: நடிகை நிலானி கண்ணீர்!

 

எனக்கு வேலை வேண்டும், உதவி செய்யுங்கள்: நடிகை நிலானி  கண்ணீர்!

என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு வேலை வேண்டும், எனக்கு உதவி செய்யுங்கள் என்று  சீரியல் நடிகை நிலானி கண்ணீர்  மல்க கூறியுள்ளார்

சென்னை: என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு வேலை வேண்டும், எனக்கு உதவி செய்யுங்கள் என்று  சீரியல் நடிகை நிலானி கண்ணீர்  மல்க கூறியுள்ளார்.

சீரியல் நடிகை நிலானி தனது நண்பர்  காந்தி லலித்குமார் என்பவர் தன்னை திருமணம் சொல்லி வற்புறுத்தி வருவதாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சமூகவலைதளங்களில், காந்தி லலித்குமாருடன் நிலானி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

nilani

இதன் பிறகு,’ தான் காந்தி லலித்குமாரை காதலித்தது உண்மை, ஆனால்  அவர் குடிபோதைக்கு அடிமையாகி சைக்கோ மாதிரி நடந்து கொண்டார்.அவருக்கு நிறையப் பெண்களுடன் தொடர்பு இருந்தது, அதனால் அவரை விட்டு விலகினேன்.அவரது தற்கொலைக்கு நான் காரணமில்லை’ என்று விளக்கமளித்தார். இதையடுத்து கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார் நிலானி. இதனால் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.

nilani

தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலானி இணையதள ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த போது, ‘ஒரு பெண் தனியாக இருந்தால் அதுவும் நடிகை என்றாலே இந்தச் சமூகத்தில் தவறாக நினைக்கிறார்கள், நான் 30 வீடுகளுக்கும் மேல் வாடகைக்குக் கேட்டு சென்றுவிட்டேன், கணவர் இல்லை தனியாக இருக்கிறேன் எனக் கூறினால் வீடு தரமாட்டேன் என்கிறார்கள்.

இந்நிலையில்தான் காந்தி லலித் குமாரை எனது கணவர் என்று பொய் சொல்லி வாடகைக்கு வீடு பிடித்து நானும் என் குழந்தையும் குடியேறினோம். இதுதான் நடந்த உண்மை. என் கணவர் மீது எனக்கு இருந்த கோபம், எனக்கு அவர் செய்த துரோகம் தான் நான் காந்தியை தேர்ந்தெடுத்தேன். மற்றபடி நான் காந்தியிடம் இருந்து பணம் எதுவும் ஏமாற்றி வாங்கவில்லை.  காந்தி எனக்காக இறந்தார், ஆனால் அதற்கு நான் காரணமில்லை. பிரிவு எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்கும். அது தான் என் வாழ்க்கையிலும் நடந்தது.எனக்கு பல பேர் கூட தொடர்பு இருக்கு என்று சோஷியல் மீடியாவில் பேசுறீங்க. அப்படி இருந்து இருந்தா நான் வேற மாதிரி வாழ்க்கையை வாழ்ந்து இருப்பேன்.இனிமே அப்படி வாழ தான் நான் முயற்சி செய்வேன். இனிமே சமூகத்தை பார்த்தோ, சோஷியல் மீடியாவை பார்த்தோ பயப்பட மாட்டேன். இது தான் என் பாதைன்னு நான் போக போறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

காந்திக்கும் எனக்கு கடந்த 8 மாதமாக எந்தவித தொடர்பும் இல்லை, அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. அப்படி இருக்கும் போது எனக்காக ஏன் அவர் சாக வேண்டும். நான் வேண்டும் என்று நினைத்திருந்தால் எதற்கு வேறு பெண்ணுடன் திருமணத்திற்குத் தயாராக வேண்டும். என்னை வேண்டாம் என்று கூறியவனை நான் தூக்கிபோடுறது எப்படி தவறாகும் என்று கேள்வி எழுப்பியுள்ள நிலானி, இப்போது என் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு வேலை வேணும், எனக்கு உதவி செய்யுங்கள் ‘  என்று  கண்ணீருடன் கூறியுள்ளார்.