எனக்கு ரஜினிகாந்த் நடித்த படங்கள் “மட்டும்” மிகவும் பிடிக்கும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

 

எனக்கு ரஜினிகாந்த் நடித்த படங்கள் “மட்டும்” மிகவும் பிடிக்கும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

இப்படம் கடந்த மாதம் ஜனவரி 24-ம் தேதி வெளியான படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

எனக்கு ரஜினிகாந்த் நடித்த படங்கள் “மட்டும்” மிகவும் பிடிக்கும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

விஷால் நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள ‘சைக்கோ’ படத்தில் உதயநிதி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக  அதிதி ராவ்  நடித்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இயக்குநர் ராம், நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் ஜனவரி 24-ம் தேதி வெளியான படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

ttn

இந்நிலையில் இப்படத்தின் சக்ஸஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில்  நடிகர் உதயநிதி ஸ்டாலின், மிஷ்கின், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ttn

அப்போது நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, ‘ நான் வெற்றிவிழாவில் கலந்து கொண்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்குப் பிறகு இப்போதுதான் பட விழாவில் சந்திக்கிறேன். எனக்கு படத்தில் நடிக்கத் தெரியாது. அதனால் தான் என்னை வைத்து மிஷ்கின் படம் எடுத்திருக்கிறார்.நித்யா மேனனுடன் நடிப்பது சவாலாக இருந்தது. அவர் என்னை திட்டி கைதட்டல் வாங்கினார். நான் அவரை அடித்து கைதட்டல் வாங்கினேன்’ என்றார். மேலும் இந்த  விழாவுக்கு இளையராஜாவால் வர இயலவில்லை. சிறப்பான  இசையை கொடுத்திருந்தார். அதேபோல் கபிலன் அருமையான பாடலை வரிகளை கொடுத்தார்’ என்று பாராட்டு தெரிவித்தார். 

ttn

தொடர்ந்து பேசிய அவர்,  எனக்கு ரஜினிகாந்த் நடித்த படங்கள் மட்டும் மிகவும் பிடிக்கும் என்றார். இதை இரண்டு முறை அழுத்தமாகக் கூறியதால் அங்கு  அரசியல் வீசத்தொடங்கியது. இதனால்  அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.