எனக்கு புரியுற மாதிரி பேசுங்க… மாநிலங்களவையில் கெத்து காட்டிய கனிமொழி

 

எனக்கு புரியுற மாதிரி பேசுங்க… மாநிலங்களவையில் கெத்து காட்டிய கனிமொழி

மாநிலங்களவையில் கனிமொழி பேசி கொண்டிருந்தபோது ஹிந்தியில் பேசிய துணை சபாநாயகரிடம் எனக்கு புரியும் மொழியில் பேசுங்கள் என கூறினார்.

டெல்லி: மாநிலங்களவையில் கனிமொழி பேசி கொண்டிருந்தபோது ஹிந்தியில் பேசிய துணை சபாநாயகரிடம் எனக்கு புரியும் மொழியில் பேசுங்கள் என கூறினார்.

பொருளாதார அடிப்படையில் உயர் சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த செயல்பாடுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாநிலங்களவையில் இதுகுறித்து விவாதம் நேற்று நடைபெற்றது.

அப்போது, திமுக எம்.பி கனிமொழி, நான் பெரியார் மண்ணில் இருந்து வந்துள்ளேன். எங்களுக்கு சமூக நீதிதான் முக்கியம். சாதியால் புறக்கணிக்கப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டுவர, முதன்முதலாக இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததே நீதிக்கட்சி ஆட்சி என்பதை பதிவு செய்கிறேன். அந்த இட ஒதுக்கீடும், இதுவும் எப்போதும் ஒன்றாக இருக்காது.தற்போது பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கே முரணானது. இது சட்டத்திற்கு எதிரானது என மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், கனிமொழி பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட மாநிலங்களவை துணை சபாநாயகர் ”உங்கள் நேரம் முடிந்துவிட்டது” என்று ஹிந்தியில் கூறினார். இதை கேட்டதும் கனிமொழி ”உங்களால் எனக்கு புரியக்கூடிய மொழியில் பேச முடியுமா?” என்று அதிரடியாக கேட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், கனிமொழியின் அரசியல் வரலாற்றி அவரது இந்த பேச்சு முக்கியமானது என பலர் கூறி வருகின்றனர்.