எனக்கு தற்கொலை செய்ய அனுமதி வழங்குங்கள்; உபி முதல்வருக்கு விவசாயி எழுதிய கடிதம்

எனக்கு தற்கொலை செய்ய அனுமதி வழங்குங்கள்; உபி முதல்வருக்கு விவசாயி எழுதிய கடிதம்

கடந்த 2016-ஆம் ஆண்டு பயிர்கள் நாசமானதற்கு உதவித்தொகை அளிப்பதாக சொன்னார்கள். அதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன், இன்னும் பதில் வரவில்லை என பிரதீப் ஷர்மா தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.

கடன் தொல்லை அதிகமான ஆக்ரா விவசாயி பிரதீப் ஷர்மா தனது பிரதமர் உதவித்தொகை 2,000 ரூபாயை முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு அனுப்பி ஒரு கடிதத்தை அத்துடன் இணைத்துள்ளார். அதில் தனக்கு 35 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும், உதவி செய்யவும் அல்லது தற்கொலை செய்துகொள்ள அனுமதி வழங்கவும் என குறிப்பிட்டுள்ளார்.

prad

வாடகை வீட்டில் வசிக்கும் பிரதீப ஷர்மா, அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே மிகவும் சிரமப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு பயிர்கள் நாசமானதற்கு உதவித்தொகை அளிப்பதாக சொன்னார்கள். அதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன், இன்னும் பதில் வரவில்லை என பிரதீப் ஷர்மா தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.

sas

தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரதீப், கடந்த மாதம் இதுபற்றி கேட்க மத்திய விவசாயத்துறை அமைச்சரை சந்திக்க சென்றேன். ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. என் மாமா ஒரு விவசாயி, அவரும் கடன் தொல்லையில் உழன்று மாரடைப்பால் இறந்துபோனார் என தெரிவித்தார். 

viv

மோடி அரசாங்கம் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் விவசாயி ஒருவர் தன் எதிர்ப்பை தெரிவிக்க 750 கிலோ வெங்காயத்தை விற்று பிரதமர் மோடிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க: ஜொமோட்டோ ஊழியரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் : கேஸ் போடுவோம் என்று மிரட்டல்!