எனக்கு கொரோனா இல்ல! மருத்துவமனையிலிருந்து தப்பிய கொரோனா நோயாளி!! 

 

எனக்கு கொரோனா இல்ல! மருத்துவமனையிலிருந்து தப்பிய கொரோனா நோயாளி!! 

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை உண்டு பண்ணியுள்ளது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை உண்டு பண்ணியுள்ளது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. நேற்றுவரை 39 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 16 பேர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவார்கள். இந்த நிலையில், புதிதாக 4 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கும், கேரளாவில் 5 பேருக்கும் கர்நாடகாவில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

Mangaluru hospital

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் நேற்று இரவு கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார்.  துபாயிலிருந்து மங்களூரு விமான நிலையம் வந்து இறங்கிய அந்த நபரை விமான நிலையத்திலேயே பரிசோதித்த மருத்துவ குழுவினர், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கான தனி வார்டில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அந்த நபர் தனக்கு கொரோனா இல்லை எனக்கூறி மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்றார். உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மங்களூரு காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.