‘எனக்கு காய்ச்சல் மட்டும் தான், கொரோனா இல்ல’.. என்ன கூட்டிட்டு போங்க : மீண்டும் வீடியோ வெளியிட்ட இந்திய மணப்பெண்!

 

‘எனக்கு காய்ச்சல் மட்டும் தான், கொரோனா இல்ல’.. என்ன கூட்டிட்டு போங்க : மீண்டும் வீடியோ வெளியிட்ட இந்திய மணப்பெண்!

ஆந்திர மாநிலம்  கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஈர்னபாடு என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி, டிசிஎல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

ஆந்திர மாநிலம்  கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஈர்னபாடு என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி, டிசிஎல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் 18 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதனிடையே அவர் பணி  நிமித்தம் காரணமாக  சீனாவின் வூகான் நகருக்குச் சென்றிருந்தார்.

ttn

அவர் சென்ற சில வாரங்களிலேயே வூகான் மாகாணம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இது வரை 500க்கும் மேற்பட்டோர் அந்த கொடிய வகை வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பொருட்டு மத்திய அரசு விமானம் மூலம் அங்கிருப்பவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து கொண்டிருக்கிறது. 

ttn

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜோதி, தனக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க உள்ளதாகவும் என்னை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லுமாறும் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். அதனால் அவரை இந்தியாவிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

ttn

ஆனால், ஜோதிக்கு அப்போது கடும் காய்ச்சல் இருந்ததால் இந்தியாவிற்கு அனுப்பச் சீன அரசு மறுத்து விட்டது. இந்நிலையில் ஜோதி, தன்னை மீட்டுச் செல்லுமாறு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், எனக்குக் காய்ச்சல் மட்டும் தான் இருக்கிறது. எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அதனால் என்னை இங்கிருந்து உடனே மீட்டுச் செல்லுங்கள் என்று அதில் கூறியிருக்கிறார்.