‘எனக்கு ஓ.பி.எஸ் மீது மரியாதை அதிகம்’ : சர்ச்சை பேச்சு குறித்து குருமூர்த்தி விளக்கம் !

 

‘எனக்கு ஓ.பி.எஸ் மீது மரியாதை அதிகம்’ : சர்ச்சை பேச்சு குறித்து குருமூர்த்தி விளக்கம் !

திருச்சியில் நேற்று நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில், எனது அறிவுரையின் படியே ஓ.பி.எஸ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார் துக்ளக் இதழாசிரியர் குருமூர்த்தி கூறினார். 

திருச்சியில் நேற்று நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில், இரண்டாகப் பிரிந்த அதிமுக ஒன்று சேர்ந்ததில் எனக்குப் பெரும்பங்கு உண்டு என்றும் எனது அறிவுரையின் படியே ஓ.பி.எஸ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார். அதனால் தான் அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்று துக்ளக் இதழாசிரியர் குருமூர்த்தி கூறினார். 

guru

குருமூர்த்தியின் இந்த கருத்துக்கள் அதிமுகவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று ஆவேசமாகக் கூறினார். இந்நிலையில், தான் அந்த நிகழ்ச்சியில் ஏன் அவ்வாறு கூறினேன் என்று  துக்ளக் இதழாசிரியர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், ” இதை ஏற்கெனவே  ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசி எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓ பி எஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.

எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதைத் திரித்துப் பரப்புவது கன்னியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து.” என்று பதிவிட்டுள்ளார்.