எனக்கு ஓவியா என்று பெயர் வைத்தவர் இவர்தான்?

 

எனக்கு ஓவியா என்று பெயர் வைத்தவர் இவர்தான்?

கடந்த 2010 ஆம் ஆண்டு  விமல், ஓவியா நடிப்பில் வெளியான திரைப்படம் களவாணி. இப்படம் இன்றளவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாகவே உள்ளது.

சென்னை :என்  வாழ்க்கையில் மிகவும் முக்கியமான  திரைப்படம் என்றால் களவாணி  தான்  என்று நடைகி ஓவியா தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு  விமல், ஓவியா நடிப்பில் வெளியான திரைப்படம் களவாணி. இப்படம் இன்றளவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாகவே உள்ளது. களவாணி  திரைப்படம் வெளியாகி சுமார் பத்தாண்டுகள் நெருங்கும் நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் சற்குணம், இயக்கி, தயாரித்துள்ளார்.

oviya

இந்நிலையில், களவாணி 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் விமல்,ஓவியா, இளவரசு , சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட ஏராளமான படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகை ஓவியா, களவாணி திரைப்படம் என்  சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். எனக்கு ஓவியா என்று பெயர் வைத்ததே சற்குணம் சார் தான். எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தது விமல். இப்படத்தில் எல்லோரும் ஒரு குடும்பம் போல் வேலைசெய்துள்ளோம், விமலுக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரியை விட இளவரசு – சரண்யா இருவருக்குமான  கெமிஸ்ட்ரி தான் சிறப்பாக வந்துள்ளது’ என்றார். 

oviya

முன்னதாக களவாணி  படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெயக்குமார் என்பவர் படம் தயாரிக்கக் கொடுத்த 67லட்சத்து 38ஆயிரம் ரூபாயை திருப்பி தராமல் படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்ததோடு, வரும் 10ஆம் தேதிக்குள் இயக்குநர் சற்குணம் இதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.