எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவால்ல, அவிங்க ரெண்டு கண்ணும் அவிஞ்சு போகணும் – காங்கிரஸ்

 

எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவால்ல, அவிங்க ரெண்டு கண்ணும் அவிஞ்சு போகணும் – காங்கிரஸ்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு எங்களுக்குத்தான் பிரதமர் பதவி வேண்டும் என அடம் பிடிக்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். முடிவுகள் வெளியாகும் மே 23க்குப் பிறகு, பிஜேபி கூட்டணியில் இல்லாத மாநில கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு எங்களுக்குத் தான் பிரதமர் பதவி வேண்டும் என அடம் பிடிக்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். முடிவுகள் வெளியாகும் மே 23க்குப் பிறகு, பிஜேபி கூட்டணியில் இல்லாத மாநில கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் போல, பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்றாலும், பெரும்பான்மைக்கு பிற கட்சிகளை நம்பவேண்டிய சூழல் ஏற்படும். எனவே, தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருக்க காங்கிரஸுக்கு பொறுமை இல்லை. கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்று இறுமாந்திருந்த வேளையில், தனது ஆதரவை மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு அளித்து அதிர்ச்சி தந்தது காங்கிரஸ். இந்தமுறையும் அதே ஃபார்முலாவை தேசிய அளவில் முன்னெடுக்கும் முனைப்பில் இருக்கிறது காங்கிரஸ்.

தேர்தலின்போது, முறுக்கிக்கொண்டிருந்த தெலுங்கானாவின் சந்திர சேகர் ராவ் மற்றும் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரிடமும் பழையதை எல்லாம் மறந்து, அண்ணே நாகராஜ அண்ணே எப்புடிண்ணே இருக்கே என இப்போதே துண்டு விரிக்கிரது காங்கிரஸ். ரொம்ப எளிமையா சொல்றதுன்னா, எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல, பிஜேபி ஆட்சி கவுந்து அவிங்க ரெண்டு  கண்ணும் போகணும் ஆண்டவா என்பதுதான் காங்கிரஸின் வேண்டுதலாக இருக்கிறது.