எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது: மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேச்சு!

 

எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது: மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேச்சு!

எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால்தான் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன் என்று இளையராஜா மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

சென்னை: எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால்தான் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன் என்று இளையராஜா மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

இசையமைப்பாளர் இளைய ராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நுண்கலைப் புலம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, ‘இங்கு நான் இரண்டாவது முறையாக வந்துள்ளேன். 1994-ல் எனக்கு இங்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இந்த விழாவுக்கு வந்துள்ளேன். இசையும், பாடல்களும் காற்றில் பரவும் அசுத்தங்களைச் சுத்தம் செய்கின்றன.

நாம் எல்லா இசைகளுக்கும் தலையாட்டுவது இல்லை. பக்குவப்பட்ட இதய குரலிலிருந்து வரும் இசைக்கு மட்டுமே தலையாட்டுகிறோம். இதனால் கவலையை சாந்தப்படுத்த முடிகிறது என்று பல்வேறு தரப்பு மக்கள் இதை என்னிடம் கூறியுள்ளனர். சாதனை என்பது அதுவாக நடக்கக் கூடியது. நான் சொல்லப்படாத சாதனைகள் பல உள்ளன. இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை, பிறக்கிறார்கள். எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால்தான் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன்’ என்றார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் இளையராஜா பெயரில் இருக்கை ஒன்று அமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.