எனக்கும் தர்ஷனுக்கும் அஃபேரா ? உனக்கு அறிவு இருக்கா இல்லையா ? ஷெரினிடம் வாங்கிக்கட்டி கொண்ட வனிதா!

 

எனக்கும் தர்ஷனுக்கும்  அஃபேரா ? உனக்கு அறிவு இருக்கா இல்லையா ? ஷெரினிடம் வாங்கிக்கட்டி கொண்ட வனிதா!

என் கண்முன்னே அஃபர் நடக்குது என்று சொல்ல கடுப்பான ஷெரின், என்னோட ரிலேஷன்ஷிப்ப நீ எப்படி  அஃபர்ன்னு சொல்லலாம்.

பிக் பாஸ் 3  இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.  

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி, மதுமிதா, சரவணன், கஸ்தூரி மற்றும் ரேஷ்மா ஆகியோர் வெளியேறியுள்ளனர். மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா நுழைந்த நிலையில்  தற்போது பிக் பாஸ் வீட்டில் மேலும்  கலவரத்தை தூண்டும் வகையில் எலிமினேட் ஆகி வெளியே சென்ற அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். 

இந்நிலையில்  இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், வனிதா சாக்ஷி மற்றும் ஷெரினிடம் என் கண்முன்னே அஃபேர் நடக்குது என்று சொல்ல கடுப்பான ஷெரின், என்னோட ரிலேஷன்ஷிப்ப நீ எப்படி  அஃபர்ன்னு சொல்லலாம். உனக்கு தெரியாம என்ன பேசிட்டு இருக்க நீ?உனக்கு எந்த உரிமையும் இல்ல என்னபத்தி பேச..உனக்கு அறிவு இருக்கா? என்று கத்துகிறார். மேலும் இந்த தகராறில் தர்ஷன் வர, நீ வராத என்று வனிதா கூற, கடுப்பான ஷெரின்,  என்னடா பண்ணேன் உன்ன நான்? என்று கொந்தளிக்கிறார்.

ஏற்கனவே சாக்ஷியிடம் வனிதா வுக்கு தர்ஷனிடம் நான் பேசுவது பிடிக்கவில்லை என்று ஷெரின் கூறிய நிலையில் தற்போது மீண்டும் ஷெரின் – தர்ஷன் உறவை வைத்து வனிதா சண்டையை கிளப்பியுள்ளது தெரிகிறது.