எனக்குப் பையன் தான் பிறப்பான்: பிரசவத்திற்கு முன்பே கணித்துச் சொல்லும் எமி ஜாக்சன் 

 

எனக்குப் பையன் தான் பிறப்பான்: பிரசவத்திற்கு முன்பே கணித்துச் சொல்லும் எமி ஜாக்சன் 

எமி ஜாக்சன் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என மகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை: எமி ஜாக்சன் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என மகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதைத்தொடர்ந்து விக்ரம், விஜய், உதயநிதி, தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். 

இவர் கடந்த ஜனவரி மாதம் தொழிலதிபர் ஜார்ஜ் பனையோத்துவை காதலிப்பதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். திருமணத்துக்கு முன்பு கர்ப்பமானதால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. 

AMY

ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் எமி தனது சமூகவலைத்தளம் மூலம், தனது தாய்மை மற்றும் கர்ப்பம் குறித்துப் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி கர்ப்பமாக இருக்கும் போது என்ன மாதிரியான உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்று கர்ப்பிணிகளுக்கு ப்ரீ அட்வைஸ்யும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு பேபி ஷவர் விழா நடைபெற்றது. அப்போது வெளிர் நீல ஆடையில் அழகாக இருக்கும் எமி, ‘தனக்கு ஆண் குழந்தை’ பிறக்கப் போவதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.