எனக்காக பொறந்தாயே எனதழகா..!: காதல் கணவருக்கு ஹாப்பி பர்த்டே சொன்ன சமந்தா!

 

எனக்காக பொறந்தாயே எனதழகா..!: காதல் கணவருக்கு ஹாப்பி பர்த்டே சொன்ன சமந்தா!

நடிகை சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி புகைப்படம் பகிர்ந்திருப்பது வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகை சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி புகைப்படம் பகிர்ந்திருப்பது வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த் ஆண்டு அக்.6ம் தேதி தெலுங்கு நடிகரும், தனது காதலருமான நாகசைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின் படு பிசியாக நடித்து வரும் சமந்தா தொடர்ச்சியாக ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார்.

இவரது நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட சில படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்தின் நாயகியாக சமந்தா நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகையாக உள்ள சமந்தா, தனது கணவருக்கு சூப்பர் மனைவியாக இருக்கிறார்.

சமீபத்தில் நாகசைதன்யாவின் பிறந்தநாளை கோவாவில் கொண்டாடினார் சமந்தா. தனது கணவருக்கு பிறந்தநாள் ஸ்பெஷலாக முத்த பரிசு வழங்கிய சமந்தா, அது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து, அன்பான வார்த்தைகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.