எந்த வைரஸும் தமிழக மக்களைத் தாக்காது .. அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி !

 

எந்த வைரஸும் தமிழக மக்களைத் தாக்காது .. அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி !

சீன நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சீன நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடிய வகை நோய் பரவும் தன்மை கொண்டதால் அண்டை நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டது. அதனால், சீனாவில் இருந்து சென்னை வரும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் சீனாவின் வூகான் நகரிலிருந்து கேரளாவிற்குச் சென்ற ஒரு மாணவருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

இந்நிலையில் இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, எந்த வைரஸும் தமிழக மக்களைத் தாக்காத அளவிற்குச் சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, தஞ்சையில் தமிழில் குடமுழுக்கு செய்வதை வரவேற்பதாகத் தெரிவித்த அமைச்சர், கருணாநிதிக்காக மு.க ஸ்டாலின் அவரது வீட்டில்  சமஸ்கிருதத்தில் பூஜை நடத்தியதை மறந்து விட கூடாது என்று மறைமுகமாக சாடினார்.