எந்த ராசியினரால் எல்லாம் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாது?

 

எந்த ராசியினரால் எல்லாம் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாது?

27.08. 2019 (செவ்வாய்கிழமை)
நல்ல நேரம்
காலை 7.45 மணி முதல் 8.45 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம்
காலை  9 மணி முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம்
மூலம், பூராடம் 

27.08. 2019 (செவ்வாய்கிழமை)
நல்ல நேரம்
காலை 7.45 மணி முதல் 8.45 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 3 மணி முதல் 4.30 வரை
எமகண்டம்
காலை  9 மணி முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம்
மூலம், பூராடம் 
பரிகாரம்
பால் 

mesham

மேஷம் 
உரிய நேரத்தில் குடும்பத்தினர் அளிக்கும் ஆதரவால், இன்று நீங்கள் விரும்பியபடியே உங்களது செயல்களுக்கான பலன்கள் கிடைக்கும். ஆனால் இன்றைய உற்சாகம் தொடர்ந்திட தொடர்ந்து உழைப்பில் கவனம் செலுத்துங்கள். எல்லா கோணத்திலும் ஆராயாமல் முதலீடு செய்தால் நிச்சயமாக நஷ்டம் ஏற்படுகிற காலகட்டம் இது. ஆனாலும், முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும். மனசஞ்சலப்படாமல் தள்ளி ஒதுங்கிக் கொள்ளுங்கள். வேலையில் உங்களது கடின உழைப்பு இன்று நல்ல பலனை தரும்.
அதிர்ஷ்ட எண்: 4 

rishbham

ரிஷபம் 
புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். உங்களது நிதானமான, கனிவான பேச்சு, உறவினர்களிடையே நல்ல பெயரைப் பெற்று தரும். ஆதாயம் தரும் நாளாக இன்று உங்களுக்கு அமையும். 
அதிர்ஷ்ட எண்: 3 

midhunam

மிதுனம் 
நீண்டகாலமாக  மறைமுக இடங்களில் உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். ஆனால் சுயநலத்தையும், முன்கோபத்தையும் தவிர்த்து விடுங்கள். மற்றவர்களை கவர்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். விஷயங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திட உடன்பிறந்தவர்களுக்கு உதவுங்கள். இன்று அலுவலகத்தில் புத்துணர்சியுடன் செயல்படுவீர்கள். இன்றைய நாள் முழுவதுமே இனிமையான பொழுதாக இருக்கும்
அதிர்ஷ்ட எண்: 1 

kadagam

கடகம் 
நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திட்டமிட்டு செலவுகளைச் செய்வதன் மூலம் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண வேண்டிய நேரம். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். மற்றவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 5 

simmam

சிம்மம் 
மற்றவர்களின் வெற்றிக்காக அவர்களைப் பாராட்டி அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள். ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். குடும்ப பிரச்சினையை தீர்க்க குழந்தையைப் போன்ற அப்பாவித்தனமான நடத்தை முக்கிய பங்காற்றும். தொழில்நுட்பங்கள் மற்றும் திறமைகளை கற்றுக் கொள்ள உதவும் வகையில் குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்களது எதிர்கால வளர்ச்சிக்கு அது உதவும்.
அதிர்ஷ்ட எண்: 3 

kanni

கன்னி 
உங்களது பணிவான நடத்தை இன்று அனைவராலும் பாராட்டப்படும். இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல், உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய ஏதாவது வேலையில் ஈடுபாடு காட்டலாம். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு தொடர்பு கொள்ளும் போது கோபத்தைக் காட்டாமல், எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் சமாளியுங்கள். உங்கள் ராசிக்கான பலன்களின் படி, உங்களால் எத்தனை சிரமப்பட்டாலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற இயலாத காலகட்டம் இது.
அதிர்ஷ்ட எண்: 2 

thulam

துலாம் 
உங்களது உடல் நலனில் மிக அதிகமான அக்கறைக் காட்ட வேண்டிய நேரம் இது. புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். சுற்றுலா மற்றும் பயணம் ஆனந்தத்தைத் தரும். அந்த மாதிரியாக மேற்கொள்ளும் பயணம் உங்களுக்கு ஆதாயம் தருவதாகவும் அமையும். 
அதிர்ஷ்ட எண்: 4 

viruchagam

விருச்சிகம் 
உங்களுக்கு விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். ஆனால், பக்கத்து வீட்டாரைப் பகைத்துக் கொண்டு வாழ்வில் பெரிதாக வெற்றி பெற முடியாது என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள். அதனால் எப்போதும் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். நிதானத்தை இழப்பது தான் நிலைமையை மேலும் மோசமாக்கும். அனைவரிடமும் நல்லுறவு பராமரிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படும் நேரம் இது.
அதிர்ஷ்ட எண்: 6 

dhanusu

தனுசு 
அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும். மாலையில் விருந்தினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களின் முயற்சிக்கு நிச்சயமாக நல்ல பலன்கள் கிடைக்கும். க்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 3 

makkaram

மகரம் 
இன்று உங்களுக்கு மிக அதிகமாக நல்ல பலன்களைத் தரக் கூடிய நாள். நீடித்த நோய்கு நீங்கள் நிவாரணம் காணலாம். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார். குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். அதுதான் குணமாக்குதலுக்கு சிறந்த வழி. எல்லையில்லா மகிழ்ச்சியின் ஆதாரமாக அவர்கள் இருப்பார்கள். காதலுக்குரியவரின் கைகளில் ஆதரவை உணர்வீர்கள். இன்று, நீங்கள் இதுவரை அலுவலகத்தில் உங்கள் எதிரியாக நினைத்த ஒருவர் உண்மையில் உங்கள் நலம் விரும்பி என்பதை தெரிந்து கொள்வீர்கள். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 3 

kumbam

கும்பம் 
உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள். உங்களுக்கு வேலையில்லாத நேரத்தை தன்னலமற்ற சேவைக்கு ஒதுக்குங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும், அதிகமான ஆனந்தத்தையும் தரும். உடல் நலன் சீராகும். இதுநாள் வரையில் இருந்து வந்த கவலைகள் தீரும். மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும்.
அதிர்ஷ்ட எண்: 9 

meenam

மீனம் 
பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். உங்கள் நடத்தையில் கோளாறாக இருக்காதீர்கள். உங்களது தவறான நடத்தையினால் வீட்டில் அமைதியைக் கெடுத்து விடும். பகல் கனவு உங்களுக்கு நிச்சயமாக பின்னடைவைத் தரும். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். தவறாக பிரிந்து கொண்டு ஏற்பட்ட பிணக்கு தீர்ந்து இன்று உங்கள் துணையுடன் இனிமையான மாலை பொழுதல் கழிப்பீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 7