எந்த ராசிக்காரர்களை எல்லாம் சந்திராஷ்டமம் ஒன்றும் செய்யாது…

 

எந்த ராசிக்காரர்களை எல்லாம் சந்திராஷ்டமம் ஒன்றும் செய்யாது…

சந்திர கிரகத்தை ‘மனதுகாரகன்’ என்று அழைக்கிறோம். மனதைக் கட்டுப்படுத்தி அறிவுத் திறனை நிர்ணயிக்கும் ஆற்றல் சந்திரனுக்குத்தான் உண்டு. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு 8-ல் சந்திரன் வருகின்றதோ, அப்போதெல்லாம் அந்த ராசிக்கு சந்திராஷ்டமம்.   

சந்திர கிரகத்தை ‘மனதுகாரகன்’ என்று அழைக்கிறோம். மனதைக் கட்டுப்படுத்தி அறிவுத் திறனை நிர்ணயிக்கும் ஆற்றல் சந்திரனுக்குத்தான் உண்டு. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு 8-ல் சந்திரன் வருகின்றதோ, அப்போதெல்லாம் அந்த ராசிக்கு சந்திராஷ்டமம்.   

chandrashtam

இறைவனை வழிபட்டு இனிமை காண வேண்டிய நாள் அது. அந்த நாளில் ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவதுதான் நல்லது. 8-ல் சந்திரன் வரும்பொழுது ஒருவருடைய அறிவுத்திறனும், மனோ பலமும் குறையும். அந்த நேரத்தில் எந்தவொரு விஷயத்திலும் அவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது. அதனால்தான் சந்திராஷ்டமம் வரும் நாளில் அந்த ராசிக்காரர்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் சிக்கலைச் சந்திக்கிறார்கள்.அன்றைய தினம் பயணங்களை தள்ளிவைத்துக் கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்யக்கூடாது. சிறிய பிரச்சினைக் கூட பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். 

ஒருவர் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம்.  

chandrashtam

சந்திராஷ்டம காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்படும். கோபம், அவசரம், எரிச்சல், தேவையற்ற  கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்கள் பாதிப்படைகின்றன. 

சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாம் வீடு குருவின் வீடாகவோ அல்லது எட்டாம் வீட்டிற்கு குருவின் பார்வையோ  ஏற்பட்டால் சந்திராஷ்டம நாட்களில் கெடுபலன் ஏற்படாது. 

சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் நின்று சந்திராஷ்டமம் ஏற்பட்டால் அப்போது தீமையை காட்டிலும் நன்மையை ஏற்படும். அதிலும் சுக்கிரன் ஆட்சிபலம் பெற்றுவிட்டால் உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் அதிக நற்பலன்கள் ஏற்படும். 

crazymohan

ஒருவர் ஜாதகத்தில் ஜனன சந்திரன் குரு பார்வை பெற்ற நிலையில் அவருக்கு சந்திராஷ்டமம் கெடுதல் செய்யாது. ஒருவர் சந்திராஷ்டமம் அடையும் நட்சத்திரம் குருவின் நட்சத்திரமாகவோ சுக்கிரனின் நட்சத்திரமாகவோ அமைந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் கெடுபலன் அளிப்பதில்லை. 
இவை எதுவும் அமையாத பிற ராசிக்காரர்கள் சந்திராஷ்டம தினத்தில் பரிகாரங்களைச் செய்து, அன்றைய நாளைத் துவங்கலாம்.