எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்!

 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும்!

உங்கள் துணைவரின் விசுவாசமான இதயமும், தைரியமான எண்ணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்

23.10.2019 (புதன்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல்  5.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை
எமகண்டம்
காலை  7.30 மணி முதல்  9 வரை
சந்திராஷ்டமம் – திருவோணம், அவிட்டம்
பரிகாரம் – பால்

மேஷம்
ஒவ்வொரு முடிவு எடுக்கும் போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். நெருங்கிய நண்பர்களும் பார்ட்னர்களும் குற்றம் காண்பார்கள். உங்கள் வாழ்க்கை கடினமாகும். தவறான தகவல் தொடர்பு உங்களை டல்லாக்கும். உங்கள் வேலையை கவனியுங்கள். உள்ளே வந்து உதவி செய்ய முன்வருபவர்களை இன்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். 
அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் 
வாழ்க்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், வாழ்வில் அக்கறை காட்டுவதே உண்மையான சவால் என உணருங்கள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம் 
உங்கள் குழந்தைகளின் விஷயங்களில் ஆதரவு அளிப்பது அவசியம். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தை இன்று உங்களின் ரொமான்சை கெடுத்துவிடும். முக்கியமான பிராஜெக்ட்களை சரியான நேரத்தில் முடித்து தொழில் ரீதியாக நல்ல லாபம் பெறுவீர்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும்.
அதிர்ஷ்ட எண்: 5

கடகம் 
இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். மனதில் செலவுகள் தான் ஆக்கிரமித்திருக்கும். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் 
உங்கள் துணைவரின் விசுவாசமான இதயமும், தைரியமான எண்ணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். 
அதிர்ஷ்ட எண்: 7

கன்னி 
நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. வேகமாக முடிவு எடுக்காதீர்கள் – குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5

துலாம் 
தனிப்பட்ட பிரச்சினைகல் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். நியாயமாக இருக்க முயற்சி செய்யுங்கள், குறிப்பாக நீங்கள் நேசிக்கும் நபர்கள் மற்றும் உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களிடம். 
அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் 
எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் களைப்படைவீர்கள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். மனைவியுடன் தகராறு செய்வது மனதை டென்சனாக்கும். தேவையில்லாமல் அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். நம்மால் மாற்ற முயாதவற்றை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்வதே வாழ்க்கையில் நல்ல பாடமாகும். 
அதிர்ஷ்ட எண்: 9

தனுசு 
உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் கூடுதல் தாராளமாக இருந்தால் நெருக்கமானவர்கள் உங்களிடம் வரம்புமீறி சாதக நிலை எடுப்பர். இன்று ஒரு மனம் உடைவதை தடுத்து நிறுத்துவீர்கள். இன்று உங்கள் எல்லோருக்கும் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அதிக சோஷியலான நாள் – உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். 
அதிர்ஷ்ட எண்: 6

மகரம் 
அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். விஷயங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திட சகோதரருக்கு உதவுங்கள். மோதல்களுக்கு தேவையில்லாமல் இடம் தராதீர்கள். மாறாக சுமுகமாக அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 6

கும்பம் 
இன்பச் சுற்றுலாக்களும் சமூக நிகழ்ச்சிகளும் உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து மகிழ்விக்கும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்து விடும். ஹாபிகளுக்காகவும் குடும்பத்தினருக்கு உதவுவதற்காகவும் சிறிது நேரத்தை நீங்கள் செலவிடலாம். இன்ட்ரஸ்டிங்கான ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. வேலையிடத்தில் ஒருவர் உங்கள் திட்டங்களை சிதைக்க முயற்சி செய்யலாம்.
அதிர்ஷ்ட எண்: 4

மீனம் 
எல்லையில்லாத சக்தியும் மகிழ்ச்சியும் உங்களை தொற்றிக் கொள்ளும். எந்த ஒரு வாய்ப்பையும் உங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும். ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். டென்சன் இருக்கும். ஆனால் குடும்ப ஆதரவு உதவியாக அமையும். கடுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள், இன்று உங்கள் நாள் என்பதால் நிச்சயமாக அதிர்ஷ்டமாக இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1