எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தொழிலில் வெற்றி பெறும் அதிர்ஷ்டம் உண்டு!

 

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தொழிலில் வெற்றி பெறும் அதிர்ஷ்டம் உண்டு!

உங்கள் துறையில் வரம்பில்லாத வெற்றியை பெறப் போகிறீர்கள். உங்கள் கை ஓங்க, எல்லா திறமைகளையும் பயன்படுத்துங்கள். 

31-01-2020 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம் 
காலை 6.30 மணி முதல் 7.30 வரை
மாலை 5 மணி முதல் 5.30 வரை
ராகு காலம் 
காலை 10.30 மணி முதல் 12 வரை
எமகண்டம் 
மாலை 3 மணி முதல் 4.30 வரை

மேஷம் 
இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால், உடல்நலனில் சிறிது அக்கறை தேவைப்படும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். வேலைகள் நிலுவையில் இருந்தாலும் ரொமான்சும் சமூக நிகழ்வும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் 
அழுத்தத்தை புறக்கணித்துவிட முடியாது. நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தேவைக்கு அதிகமாக நண்பர்கள் தலையிடுவார்கள். அன்புக்குரியவருடன் குறைந்த வெளிச்சத்தில் உணவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் தொழில் வளத்தை மேம்படுத்த தொழில் திறமையைப் பயன்படுத்துங்கள். உங்கள் துறையில் வரம்பில்லாத வெற்றியை பெறப் போகிறீர்கள். உங்கள் கை ஓங்க, எல்லா திறமைகளையும் பயன்படுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் 
சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து நீங்கள் விடுபடுகிறீர்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும். திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள நல்ல சமயம். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். உங்கள் திருமண வாழ்க்கையிலேயே மிக சிறந்த நாளாக இன்று அமையும்.
அதிர்ஷ்ட எண்: 1

கடகம் 
உங்களுக்கு நல்ல நேரம் காத்திருப்பதால் உற்சாகமாக இருங்கள். உங்களுக்கு கூடுதல் சக்தியும் கிடைக்கும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை அவை இன்று நிஜமாக நிறைவேறும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். 
அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் 
வலுவான எதிர்ப்பு மற்றும் அச்சமற்ற தன்மையால் மனதின் சக்தி அதிகரிக்கும். இந்த வேகம் தொடரட்டும். எந்த சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இது உதவும். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். மனதில் அழுத்தம் இருந்தால், உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் பேசுங்கள். அது உங்கள் தலையில் இருந்து பாரத்தை இறக்கி விடும். 
அதிர்ஷ்ட எண்: 3

கன்னி 
வாழ்வை முழுமையாக அனுபவிக்க வெளியில் செல்லும் போது உங்களுக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள். எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 2

துலாம் 
வீட்டுக் கவலைகள் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படுத்தும். இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல்  உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய ஏதாவது வேலையில் ஈடுபாடு செலுத்துங்கள். இன்று மாலை வரும் தொலைபேசி அழைப்பு இந்த நாளை இனிமையாக்கும். 
அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் 
உங்கள் நல்ல வகையில் உணரச் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வதற்கு அற்புதமான நாள். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.  அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். வேலையை நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள். 
அதிர்ஷ்ட எண்: 6

தனுசு 
பலன் தரக் கூடிய நாள். நீடித்த நோய்க்கு நீங்கள் நிவாரணம் காணலாம். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். அனுபவசாலிகளுடன் இருந்து அவர்கள் சொல்வதைக் கேட்டு அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால், அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். 
அதிர்ஷ்ட எண்: 3

மகரம் 
திடமான மனம் இல்லாததால் உணர்வு மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுவீர்கள். உங்கள் நண்பர்களின் உதவியால் நிதிப் பிரச்சினை தீர்ந்து விடும். நீங்கள் சேர்ந்து வாழ்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பதில் கவனமாக இருக்கவும். ஏதாவது மாறுபட்ட கருத்து இருந்தால் சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் 
குழந்தையைப் போன்ற இயல்பு வெளிப்பட்டு விளையாட்டுத்தனமான மனநிலைக்குப் போவீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள் தனிப்பட்ட அளவில் பிரச்சினைகள் ஏற்படுத்துவார்கள். இன்று நீங்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவுகள் வளர்ச்சிக்கு புதிய ஐடியாக்களைத் தரும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 9

மீனம் 
இன்று உங்களை எரிச்சலடையச் செய்யும், அசவுகரியமாக்கும் வகையில் பல டென்சன்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 7