எந்த நாட்டிற்கு போனாலும் நெஞ்ச நிமிர்த்தி சொல்லலாம் சூப்பர் ஸ்டார் எங்கள் நாட்டவர் என… அருண் விஜய்!

 

எந்த நாட்டிற்கு போனாலும் நெஞ்ச நிமிர்த்தி சொல்லலாம் சூப்பர் ஸ்டார் எங்கள் நாட்டவர் என… அருண் விஜய்!

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார் லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் காவலராக நடித்துள்ள இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து  தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அருண்விஜய்

இந்நிலையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் அருண்விஜய், “நானும் உங்களை போன்று ஒரு ரஜினி ரசிகனா தர்பார் படத்தை எதிர்பார்த்துட்டு இருக்கேன். நான் முதன்முறையாக படத்தில் நடிக்க வந்தபோது முதல் காட்சிக்காக என்னை கையை பிடித்து கேமரா முன்பு அழைத்து வந்தவர் ரஜினி . உலகத்தில் எங்கு சென்றாலும் பெருமையாக சொல்லிப்போம்.  சூப்பர் ஸ்டாரே எங்க தமிழ்நாட்டுல தான் இருக்கார் என…” என்று கூறினார்.