எந்த நட்சத்திரத்திற்கு எந்த திசை அதிர்ஷ்டத்தை அள்ளி தரும்? – நட்சத்திர பலன்கள்!

 

எந்த நட்சத்திரத்திற்கு எந்த திசை அதிர்ஷ்டத்தை அள்ளி தரும்? – நட்சத்திர பலன்கள்!

25.09.2019 (புதன்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
பிற்பகல் 3 மணி முதல் 4 வரை
ராகு காலம்
பிற்பகல் 12 மணி முதல்  1.30 வரை
எமகண்டம்
காலை 7.30 மணி முதல் 9 வரை
சந்திராஷ்டமம் – திருவோணம்.
பரிகாரம் – பால்.
இன்று ஏகாதசி விரதம்

மேஷம் 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்வதால் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் நேரிடும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அசுவினி : வெற்றி கிடைக்கும்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : திருப்திகரமான நாள்.
ரிஷபம் 
உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பயணங்களால் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : அனுகூலமான நாள். 
மிருகசீரிடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிதுனம் 
சாதுர்யமான பேச்சுக்களால் பாராட்டப்படுவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். முக்கிய முடிவுகளில் முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும். செய்யும் பணிகளில் பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்படுவது மேன்மையை தரும். மனதில் இருந்த ஒருவிதமான தயக்கம் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

மிருகசீரிடம் : பாராட்டப்படுவீர்கள்.
திருவாதிரை : இன்னல்கள் நீங்கும்.
புனர்பூசம் : தயக்கம் நீங்கும்.
கடகம் 
அலுவலகம் சார்ந்த உடைமைகளில் கவனம் வேண்டும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் போது சிந்தித்து செயல்படவும். புதிய தொழில் துவங்குவதற்கான கிரக நிலைகள் சாதகமாக இல்லை. மதிப்பும், பொருளாதாரமும் உயரும். மனம் விட்டு பேசுவதால் மனதில் இருந்த கவலைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : சிந்தித்து செயல்படவும்.
ஆயில்யம் : மதிப்பு உயரும்.
சிம்மம் 
நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் சில விரயச் செலவுகள் நேரிடலாம். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களால் செயல்களில் காலதாமதம் உண்டாகலாம். வெளியூர் பயணங்களால் மனதில் உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும். 
பூரம் : செலவுகள் நேரிடலாம்.
உத்திரம் : உற்சாகம் பிறக்கும்.

கன்னி 
வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களிடம் பழகும் போது கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்களில் காலதாமதம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் தேவையற்ற வாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : வாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம் 
மாணவர்களுக்கு சாதகமான நாள். நினைவாற்றல் மேம்படும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சுமூக முடிவுகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். தைரியத்துடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : நினைவாற்றல் மேம்படும். 
சுவாதி : புதிய இலக்குகள் பிறக்கும். 
விசாகம் : காரியசித்தி உண்டாகும்.
விருச்சகம் 
தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நாள். திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். மறைமுக தடைகளை தகர்த்து வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் : கலகலப்பான நாள்.
கேட்டை : வெற்றி காண்பீர்கள்

தனுசு 
வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களிடம் அமைதிப்போக்கினை கையாளவும். சிலருக்கு பணி மாற்றம் உண்டாகும். பெரியோர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகு செயல்படுத்துங்கள். கூட்டாளிகள் மற்றும் நண்பர்களிடம் அனுசரணையாக நடத்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : கவனம் வேண்டும். 
பூராடம் : மாற்றம் உண்டாகும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

மகரம் 
எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நிர்வாகத் திறமை வெளிப்படும். சுப காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் உண்டாகும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : வெற்றி கிடைக்கும்.
திருவோணம் : திறமைகள் வெளிப்படும். 
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம் 
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஒப்பந்தம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புனித யாத்திரைக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 

அவிட்டம் : இன்பமான நாள்.
சதயம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரட்டாதி : பயணங்களால் மேன்மை உண்டாகும்.

மீனம்
புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடித்து பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். 
உத்திரட்டாதி : அபிவிருத்தி உண்டாகும்.
ரேவதி : மதிப்பு அதிகரிக்கும்.