எந்த நட்சத்திரகாரர்கள் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்!

 

எந்த நட்சத்திரகாரர்கள் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்!

ஜோதிட அடிப்படையில் எந்தெந்த நட்சத்திரகாரர்கள் எந்தெந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதினை நம் முன்னோர்கள் பல்வேறு ஜோதிட கிரந்தங்களில் தெரிவித்துள்ளனர்.அதனை பற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

வாழ்க்கை செழிக்கத் தேவையான முன்னறிவிப்பாக ஜோதிடக் கலையை பயன்படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.ஒருவன் பிறந்த தருணத்தில் ஆட்சி செலுத்தும் கிரகங்கள் மற்றும் ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் அமைவுகளை அடிப்படையாகக் கொண்டு,மகான்களால் எழுதிவைக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம், அவனுக்கான வருங்கால பலன்களை வரையறுத்துவிடுகின்றது.

naktr

இயற்கையின் இயக்கத்தை ஆற்றலை நம்மிடம் திணிப்பது கிரகங்களும், ராசி நட்சத்திரங்களும் தான். அதற்கு ஆட்படும் மனிதனானவன் தனது பூர்வஜன்ம வினைகளுக்கு ஏற்ப பலனையோ, பாதிப்பையோ ஏற்கிறான்.

அங்ஙனம் பாதிப்புகள் உண்டாகும்போது மனம் சோர்வுறாமல் வலிமை பெறவும், தாழ்வைக் கட்டுப்படுத்தவும்,வாழ்வை மேம்படுத்தவும்  இறைவழிபாடு உதவும்.

nakshtyr

ராசி நாயகனையும் நட்சத்திர நாயகனையும் சமநிலைப் படுத்தக்கூடிய வல்லமை ஆலயங்களுக்கு மட்டுமே உண்டு.குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட்டு வரம் பெறவேண்டிய கோயில்கள் என்னென்ன என்பது குறித்த விரிவான தகவல்களை பார்போம்.

1.அசுவினி- சனிஸ்வரர்- திருநள்ளாறு தர்ப்பன்யேசுவரர் கோயில் .
2.பரணி- காளி -திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் .
3. கார்த்திகை- ஆதிசேஷன்- நாகப்பட்டினம் நாகநாதர் கோயில்.
4.ரோகிணி- நாக நாதர்- திருநாகேஸ்வரம்  நாக நாதர் கோயில்.
5. மிருகசீரிடம்- வனதுர்க்கை- கதிராமங்கலம்.
6. திருவாதிரை- சனீஸ்வரர்- திருக்கொள்ளிக்காடு .
7.புனர்பூசம்- தட்சணாமூர்த்தி- ஆலங்குடி.
8.பூசம்- தட்சணாமூர்த்தி – குச்சனூர்.
9.ஆயில்யம்- சனீஸ்வரர்- திருப்பரகுன்றம் சனிபகவான்.

kalabhairavar

10.மகம்- தில்லைக்காளி – சிதம்பரம்.
11. பூரம்- ராகு – திருமணஞ்சேரி.
12.உத்திரம்- வஞ்சியம்மன்- மூலனூர் தாராபுரம் .
13. ஹஸ்தம்- ஸ்ரீஉரகமெல்லணையானை- திருக்கோஷ்டியூர்.
14. சித்திரை- ராஜ துர்க்கை-  திருவாரூர்.
15.சுவாதி- சனீஸ்வரர்- திருவானைக்காவல் .
16. விசாகம்- சனீஸ்வரர் திருவேடகம் சோழவந்தான் அருகில்.
17.அனுசம்- மூகாம்பிகை- திருவிடைமருதூர்.
18.கேட்டை அங்காள பரமேஸ்வரி -பல்லடம்.

krishna

19. மூலம்- தட்சிணாமூர்த்தி- மதுரை.
20. பூராடம்- தட்சிணாமூர்த்தி-திருநாவலூர்.
21.உத்திராடம்- துர்க்கை- தட்சிணாமூர்த்தி தருமபுரம் திருநள்ளாறு.
22.திருவோணம்- ராஜ காளியம்மன்- தெத்துப்பட்டி திண்டுக்கல் அருகில்
23. அவிட்டம்- சனி- கொடுமுடி சனி பகவான் கோயில்.
24. சதயம் -சனி, திருச்செங்கோடு.
25.பூரட்டாதி – ஆதிசேஷன் – காஞ்சீபுரம் சித்ரகுப்தர்.
26. உத்திரட்டாதி – சனி, தட்சிணமூர்த்தி- ஓமாம்புலியூர்.
27.ரேவதி- சனி – வீணை ஏந்திய ஆஞ்சநேயர் – கும்பகோணம்.