எந்த தினங்களில் மகாலட்சுமி விரதம் அனுஷ்டிக்கலாம்.?

 

எந்த தினங்களில் மகாலட்சுமி விரதம் அனுஷ்டிக்கலாம்.?

வாழ்நாள் முழுவதும் பணத்தின் அம்சமான மகாலட்சுமியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கும்.
பன்னெடுங்காலமாகவே  பணத்தை லட்சுமி என்றே அழைக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. பணம் என்பது ஒரு ஜீவ நதியைப் போன்றது.

வாழ்நாள் முழுவதும் பணத்தின் அம்சமான மகாலட்சுமியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கும்.
பன்னெடுங்காலமாகவே  பணத்தை லட்சுமி என்றே அழைக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. பணம் என்பது ஒரு ஜீவ நதியைப் போன்றது. அது ஓரிடத்திலேயே தங்காமல் தொடர்ந்து வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருக்கும். அதே போன்று தான் அந்த பணத்திற்கு அதிபதியாக இருக்கும் மகாலட்சுமியின் அருட்கடாட்சம் ஒரே நபரிடத்தில் இல்லாமல், வேறு வேறு நபர்களுக்கு சென்றவாறே இருக்கும்.

mahalakshmi

அந்த லட்சுமி கடாட்சம் நமக்கு தொடர்ந்து கிடைத்திட நாம் லட்சுமி தேவியின் மனம் குளிரும் படி நடந்து கொள்வதும், லட்சுமி தேவியை முறையாக விரதம் இருந்து பூஜித்து வழிபாடுகள் செய்வதும் பலன் தரும். வாழ்நாள் முழுவதும் நமக்கு பணத்தின் தேவை இருக்கிறது. எனவே வாழ்நாள் முழுவதும் அந்தப் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
செல்வ மகளான மகாலட்சுமியை விரதம் இருந்து வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும், வாரந்தோறும் வருகிற வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி மாதத்தில் வருகின்ற வரலட்சுமி விரதம், இவை எல்லாவற்றையும் விட ஐப்பசி மாதத்தில் வருகின்ற தீபாவளித் திருநாள் ஆகியவை லட்சுமி தேவி பூஜை மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த தினங்களாக இருக்கின்றன.

mahalakshmi

இந்த தினங்களில் விரதம் இருந்து லட்சுமி தேவிக்கு படையல் வைத்து, தீபங்கள் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி, லட்சுமி காயத்ரி மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவதால், உங்களுக்கு லட்சுமி தேவியின் பூரண அருள் கடாட்சம் கிடைக்கும்