எந்த திசையில இருக்கிற கோயிலுக்கு போனா புண்ணியம் கிடைக்கும்?

 

எந்த திசையில இருக்கிற கோயிலுக்கு போனா புண்ணியம் கிடைக்கும்?

ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக வாஸ்து படி தான் கட்ட வேண்டும் என்பார்கள். அதிலும் இந்து மதத்தவர்கள் இந்த வாஸ்து சாஸ்திரத்தை அதிகம் பார்ப்பவர்கள். ஏனெனில் அந்த அளவுக்கு கட்டடக்கலையில் வாஸ்து சாஸ்திரம் பெரும் பங்கு வகிக்கிறது.

அக்னி புராணம்:

temple

வீட்டுக்கே இத்தனை விதிமுறைகள் இருக்கும் போது புனிதமான கோயிலை கட்டவும் ஏராளமான விதிமுறைகள் உள்ளன என்று அக்னி புராணம் கூறுகிறது. இதன் படி தான் கோயில் சிலைகளை அமைக்க வேண்டும் என்கிறது. கோயிலில் எந்த திசையில் நின்று வழிபட வேண்டும் என்பதிலிருந்து கோயிலின் கட்டமைப்பு முழுவதையும் இந்த அக்னி புராண நூல் எடுத்துரைக்கிறது.

முப்பெரும் கடவுள்கள் (பிரம்மன், விஷ்ணு, சிவன்): 

temple

இந்த புராணத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற கடவுள்களை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதற்கான மந்திரங்களும் வேதங்களும் இங்கே உள்ளன. எனவே பக்தர்களுக்கு இந்த புராணம் ஒரு வழிகாட்டியாக இருப்பதோடு அவர்களின் அருளையும் பெற உதவுகிறது.

விஸ்வகர்மா முந்தைய காலத்தில் கோயில் கட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. எல்லாராலும் கோயில் கட்டிட முடியாது. இதில் விஸ்வகர்மா மற்றும் அவரது சீடர்கள் தங்கள் அறிவை பயன்படுத்தி சிறந்து விளங்கினர். ஆனால் அப்போது வடிவமைக்கப்பட்ட கோவில்கள், சிலைகள் பக்தர்களின் விருப்பத்தை பெறவில்லை. ஆனால் தங்களுடைய பாவங்களை களைய இது அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.

ஏன் கோவில்கள் கட்டப்பட்டன:

temple

முந்தைய புராணப்படி மக்கள் தாங்கள் செய்த பாவத்திற்கு பிராஜித்தமாக தவம் இருந்து தெய்வங்களை சமாதானப்படுத்த இந்த கோயில்களை கட்டினர். அவர்கள் விஸ்வகர்மா முனிவரின் வழிகாட்டுதலோடு இதை செய்து வந்தார்கள். 

கோயில் கட்டுமானம்:

temple

எத்தனை கோயிலை நாம் கட்டுகிறோம் என்பதை பொருத்து நாம் செல்லும் லோகம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு கோயிலை கட்டினவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்றும், 5 கோயில்களை கட்டினவர்கள் சிவலோகம் செல்வார்கள் என்றும், 8 கோயில்களை கட்டியவர்கள் விஷ்ணுலோகம் செல்வார்கள் என்றும் 16 கோயில்களை கட்டியவர்களுக்கு பிறப்பு இறப்பு இல்லாத முழு முக்தி அடைவார்கள் என்றும் அக்னி புராணம் கூறுகிறது.

புண்ணியம்:

god

அந்தக் காலத்தில் செல்வத்தை விட புண்ணியத்துக்கு அதிக மதிப்பளித்தனர். பொருட்களைக் காட்டிலும் ஒரு கோயில் கட்டுவது புண்ணியமாக கருதப்பட்டது. அதை எப்படி புனித விதிகளுக்கு உட்பட்டு கட்ட வேண்டும் என்பது பற்றி அக்னி புராணம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

புனித விதிகள் /சடங்குகள்:

நகரத்துக்ற்கு அப்பால் முதலில் கோயில் கட்ட வேண்டும் என்றால் நகரத்துக்கு அப்பால் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். கோயிலின் கோபுரம் கிழக்கு நோக்கி அமைக்க வேண்டும். கோயிலின் நுழைவாயிலில் சூரிய ஒளி படும் விதத்தில் அமைக்க வேண்டும்.

temple

எந்த சூழ்நிலையிலும் கோயிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி இருக்க கூடாது. பிரதான தெய்வம் கோயிலின் பிரதான தெய்வம் கிழக்கு நோக்கியோ வாசலை நோக்கி அமைந்திருக்க வேண்டும். மற்ற தெய்வங்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு ஐதீக முறைகள் உண்டு.

சில கோயில்களில் பிரதான தெய்வம் மேற்கு நோக்கி இருக்கும்படி இருக்கும். அது அந்த தலத்துக்குரிய கடவுளுக்குரிய ஏதேனும் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட அமையப் பெற்றிருக்கும்.

சுவரின் வடிவம்:

temple

கோவிலின் சுவர்கள் சதுர அல்லது செவ்வக வடிவமாக கட்டப்பட வேண்டும். நீள்வட்ட வடிவம், முக்கோணம், வட்ட வடிவத்தில் சுவர்களை அமைக்க கூடாது என்று விஸ்வகர்மாவின் கட்டடக்கலை கூறுகிறது.

பூமிக்கு சமமாக:

temple

கோயிலின் முழு நிலமும் பூமிக்கு சமமாக இருக்க வேண்டும். தெய்வ சிலைகளை வைக்கும் இடங்கள் மட்டும் மூன்று அடிக்கு மேலே இருக்கலாம். மலை, கடல் வழி கோயில் எப்பொழுதும் மலை, கடல் வழியாக கட்டப்பட வேண்டும். ஆனால் அது வீடுகளின் கழிவுநீர் தேங்கும் இடமாக இருக்க கூடாது. 

கோயிலின் அளவு:

temple

கோயிலின் அளவு ஒட்டுமொத்த சிலைகளின் பெருக்க அளவிற்கு சமமாக இருக்க வேண்டும். கோவில் கட்டப்படும் நகரத்தின் தோற்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நட்சத்திர பலன்கள் பார்த்து கட்டப்பட வேண்டும். அதை பொருத்து கூட கோவிலின் பெயர்களை சூட்டிக் கொள்ளலாம்