எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது….. 351 இடங்களை ஜெயிக்கிறோம்…. ஆட்சி அமைக்கிறோம்…… அகிலேஷ் யாதவ் உறுதி…

 

எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது….. 351 இடங்களை ஜெயிக்கிறோம்…. ஆட்சி அமைக்கிறோம்…… அகிலேஷ் யாதவ் உறுதி…

2022ல் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 351 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இந்துஸ்தான் பத்திரிகை கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்ட சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ், 2022ல் உ.பி.யில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது கட்சியின் செயல்திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் சேர்ந்து அரசியல் கூட்டணி வைக்க மாட்டோம். 

சமாஜ்வாடி

இந்த முறை சமாஜ்வாடி தனித்து போட்டியிடும். தேவைப்பட்டால் எந்தவொரு சமரசமும் செய்து கொள்வோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். விரைவில் சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் வேகம் எடுக்கும். சைக்கிளுடன் 351 இடங்களை கைப்பற்றுவோம் மற்றும் ஆட்சியை அமைப்போம். சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுடனும் சமரசமாகவும் மற்றும் இணைந்து இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை

கடந்த 2017ல் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அகிலேஷ் யாதவ் கட்சி சந்தித்தது. அந்த தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி படுதோல்வி அடைந்தது. பின் 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சமாஜ்வாடி போட்டியிட்டது. அந்த தேர்தலில் அகிலேஷ் யாதவ் கட்சி 5 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.