“எந்த ஒரு தீர்ப்பு வழங்கினாலும் ஏற்க வேண்டும்” – அமித்ஷா வலியுறுத்தல்

 

“எந்த ஒரு தீர்ப்பு வழங்கினாலும் ஏற்க வேண்டும்” – அமித்ஷா வலியுறுத்தல்

அனைத்து தரப்பு வாதங்களுக்கும் சம உரிமை அளித்து வரும் மத்திய அரசு எந்த ஒரு தீர்ப்பு வழங்கினாலும் அதை முழு மனதாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். 

அயோத்தி வழக்கை பொறுத்தவரை அனைவரும் உச்சநீதமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த ஒரு தீர்ப்பு வழங்கினாலும் அதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகொள் விடுத்துள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

அயோத்தி வழக்கு ஒரு வழியாக அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 18ஆம் தேதிக்குள் முடிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் நேற்று முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் வழக்கறிஞர்கள் அக்டோபர் 18க்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகோய் நவம்பர் மாதம் ஒய்வு பெற உள்ள நிலையில் அதற்குள் இந்த வழக்கை முடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களுக்கும் சம உரிமை அளித்து வரும் மத்திய அரசு எந்த ஒரு தீர்ப்பு வழங்கினாலும் அதை முழு மனதாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.