எந்த எந்த தேதியில் திருமணம் செய்யலாம்? சுவாரஸ்ய நம்பராலஜி 

 

எந்த எந்த தேதியில் திருமணம் செய்யலாம்? சுவாரஸ்ய நம்பராலஜி 

ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு பவர் உள்ளது என்கிறது ஜோதிடம்… குழந்தை பிறப்பு முதல் திருமணம் என அனைத்திலும் நம்பர் கேம் முக்கியம் என்கின்றனர் எண் சார்ந்த ஜோதிடர்கள். இப்படி திருமணம் எந்த எந்த நாளில் செய்யலாம், செய்யக்கூடாது என்று எண் கணக்கு ஒன்றை அவர் தெரிவிக்கின்றனர். சுவாரஸ்யமான அந்த நம்பராலஜியைப் பற்றிப் பார்க்கலாம்.

ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு பவர் உள்ளது என்கிறது ஜோதிடம்… குழந்தை பிறப்பு முதல் திருமணம் என அனைத்திலும் நம்பர் கேம் முக்கியம் என்கின்றனர் எண் சார்ந்த ஜோதிடர்கள். இப்படி திருமணம் எந்த எந்த நாளில் செய்யலாம், செய்யக்கூடாது என்று எண் கணக்கு ஒன்றை அவர் தெரிவிக்கின்றனர். சுவாரஸ்யமான அந்த நம்பராலஜியைப் பற்றிப் பார்க்கலாம்.
உங்கள் திருமண நாள் 1-1-2020 என்று வைத்துக்கொள்ளுங்கள். இதன் கூட்டுத் தொகை, 6 (1+1+2+2=6). உங்களின் திருமண நாள் எண் 6 ஆகும். இதுவே, 2019 ஜனவரி 1ம் தேதி திருமணம் ஆகியிருந்தால் அவர்களின் கூட்டுத் தொகை 5 (1+1+2+1+9=14, 1+4=5). இந்த கணக்கில் உங்கள் திருமண நாளை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்கிறது நம்பர் ஜோசியம்!

marriage

நம்பர் 1: சந்தோஷம் நிறைந்த தம்பதியாக இருப்பீர்கள். மகிழ்ச்சி மட்டுமே முக்கியம் என்று கருதி போட்டிப் போட்டு விட்டுக்கொடுப்பீர்கள். இந்த விட்டுக்கொடுத்தல்தான் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கான காரணமாக இருக்கிறது.
நம்பர் 2: திட்டமிட்டு சிக்கனமாக திருமணத்தை நடத்துபவர்கள் பெரும்பாலும் தேர்வு செய்யும் தேதியின் கூட்டுத்தொகை 2ல் முடிகிறது. நிறுத்தி நிதானமாக யோசித்து திட்டமிட்டு வாழும் தம்பதியாக இவர்கள் இருப்பார்கள். வாழ்க்கையில் மேடு பள்ளம் பல கண்டாலும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாத ஜோடியாக இருப்பார்களாம்.
நம்பர் 3: லட்சுமி கடாட்சம் நிறைந்த தம்பதியாக இருப்பார்களாம். அதனால் ஆடம்பரத்துக்கு அளவில்லை… ஊரில் இப்படி ஒரு திருமணம் நடந்தது என்ற பேச்சு இல்லாமல் இருக்காதாம். பணம் வந்தாலே பகட்டு, ஏற்றத்தாழ்வுகள் வந்துவிடுகின்றன. விட்டுக்கொடுத்தல் இருந்தால் இந்த தம்பதிகள் உச்சம் தொடலாம். 
நம்பர் 4: எல்லா பொருத்தமும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதுடன் நான்காம் எண் கூட்டுத்தொகை வருகிறதா என்று பார்ப்பது ரொம்பவும் நல்லது. வெற்றிகரமான திருமணங்கள் எல்லாம் நான்காம் எண் கூட்டில் அமைந்திருக்கும் என்கிறது எண் ஜோதிடம். கணவன் – மனைவி ஒற்றுமை நிலையாக நீடித்து இருக்குமாம். இன்ப துன்பங்களைத் தம்பதிகள் பகிர்ந்துகொள்வதால் குடும்ப மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காதாம். 
நம்பர் 5: வரக்கூடாத எண்களுள் ஒன்று இந்த ஐந்துதான். சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லை. அன்பு இருக்கும்… அதே அளவுக்கு வம்பும் இருக்குமாம். அந்த அன்புதான் பிரியாமல் பிணைத்து வைத்திருக்கும் கருவியாக இருக்கும் என்கிறது ஜோதிடம்.
நம்பர் 6: நான்கைப் போல ஆறும் ராசியான நாள். குரு பகவான் ஆசி பெற்ற நாளும் கூட. அதனால், வாழ்வில் மகிழ்ச்சி, செல்வம், அன்புக்கு குறைவு இருக்காது. குடும்பத்தில் தன வரவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே உள்ள அன்பு, நம்பிக்கை காரணமாக பணமோ வேறு எந்த ஒரு விஷயமோ இந்த தம்பதிகளை பிரிக்க முடியாதாம்.

wedding

நம்பர் 7: பிரச்னை வம்படியாக வாங்க முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் 7ஐ தேர்வு செய்யலாம். அவ்வளவ சவால் நிறைந்ததாக இருக்குமாம். குடும்ப வாழ்வில் இன்பம் என்பது குறைவாகவும் கசப்புணர்வு மிகுதியாகவும் இருக்குமாம். கணவன் மனைவிக்கு மட்டுமில்லை மாமனார் மாமியார் வரைக்கும் சண்டை நீளுமாம். ரொம்பவும் உஷார் மக்களே!
நம்பர் 8: அழகான தம்பதிகளாக இருப்பார்கள். எல்லோருக்கும் உங்கள் மீதுதான் கண். உங்களிடம் பேச, பழக முயல்வார்கள். இதனாலேயே கணவன், மனைவிக்கு இடையே சண்டை வரவும் வாய்ப்புள்ளதாம். அழகான தம்பதி என்பது போல குடும்பமும் அழகானதாகவே இருக்கும்.
நம்பர் 9: நம்பர் 7ஐப் போல இதையும் தேர்வு செய்யவே வேண்டாம். 7க்காவது கொஞ்சம் மகிழ்ச்சி மிச்சம் இருக்கும். ஆனால் 9க்கு அது கூட இல்லையாம். முறிவை சந்திக்கும் பெரும்பாலான திருமணங்கள் நடந்த நாளின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கும் என்கிறார்கள். எனவே, சாகும் வரை ஒன்றாக இருக்க வேண்டும், மறு ஜென்மம் என்ற ஒன்று இருந்தால் அதிலும் திருமண பந்தம் தொடர வேண்டும் என்று விரும்பும் ஆழமான காதல் தம்பதிகள் வேறு எண்ணைத் தேர்வு செய்வது நல்லது. இல்லை என்றால் எத்தனை ஆழமான காதலாக இருந்தாலும் அவர்கள் பிரிவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகமாம். அவர்கள் காதல் அவர்களை பிரிக்கவில்லை… நம்பரின் மகிமை அப்படி என்கின்றனர் நம்பர் ஜோதிடர்கள்!