‘எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது’ – தமிழிசை

 

‘எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது’ – தமிழிசை

கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு இன்று ஆய்வு செய்தது குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு இன்று ஆய்வு செய்தது குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பெரும் அளவிலான சேதத்தை தமிழகத்தின் 4 டெல்டா மாவட்டங்கள் சந்தித்துள்ளது. இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீடுகள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், பயிர்கள், தென்னை மரங்கள், வாழை மரங்கள் என பலவற்றையும் இழந்துவிட்டு நிர்க்கதியாய் நிற்கின்றனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தன்னார்வலர்கள், கட்சி சார்ந்தவர்கள் என பலரும் முன்னெடுத்து வருகின்றனர். இந்த சேதங்களை சீர் செய்வதற்காக முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி, முழுவதையும் சீர் செய்வதற்காக 15,000 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என்று பிரதமரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து, புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்தியக் குழு, ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது. புயல் பாதித்த அனைத்து இடங்களையும் பார்வையிடுவது சாத்தியமில்லாத ஒன்று. முடிந்தவரை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு உரிய நிவாரணம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.