எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்தெந்த தாலுகாக்கள்? அரசாணை வெளியிட்டது அரசு !

 

எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்தெந்த தாலுகாக்கள்? அரசாணை வெளியிட்டது அரசு !

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் தாலுகா விவரங்கள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
அதன்படி பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுகாக்கள் இடம் பெறும் என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் தாலுகா விவரங்கள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
அதன்படி பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் கீழ் எந்தெந்த தாலுகாக்கள் இடம் பெறும் என்பதை பார்க்கலாம்.

வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் வேலூர், 
குடியாத்தம் என 2 வருவாய் கோட்டங்களும் வேலூர், அணைகட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய 6 
தாலுகாக்களும் செயல்படும்.

tamilnadu govt

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்களும் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாற்றாம்பள்ளி, 
ஆம்பூர் ஆகிய 4 தாலுகாக்களும் இடம்பெறும். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 வருவாய் கோட்டங்களும் வாலாஜா, ஆற்காடு, நெமிலி, 
அரக்கோணம் ஆகிய 4 தாலுகாக்களும் இடம்பெறும்.

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில், 
திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி ஆகிய வருவாய் கோட்டங்களும், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, 
சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய 8 தாலுகாக்களும் இடம்பெறும் என அரசாணையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி வருவாய் கோட்டமும், புதிதாக உருவாக்கப்படும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டமும் 
வருகின்றன. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் 
தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தில் இடம்பெறும். 

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 
காஞ்சிபுரம், திருபெரும்புதூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்களும் காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் 
ஆகிய 4 தாலுகாக்களும் இடம்பெறும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய வருவாய் கோட்டங்களும் செங்கல்பட்டு, மதுராந்தகம், 
செய்யூர், திருக்கழுகுன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 8 தாலுகாக்களும் இடம்பெறும் என தமிழக அரசு 
அரசாணையில் தெரிவித்துள்ளது.