எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு தெரியுமா..!?

 

எந்தெந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு தெரியுமா..!?

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அதிரடி நடவடிக்கைகளில்  எடுத்து வருகிறார்.  இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஒரு சில பொருட்களுக்கான  ஜி.எஸ்.டி வரியை குறைத்தும், ஏற்றியும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  ஜி.எஸ்.டி

ஜி.எஸ்.டி வரி விவரங்கள் :

1. உலர்ந்த புளி மற்றும் சாப்படுவதற்கு பயன்படுத்தப்படும் இலை அல்லது மட்டைகளில் தயாரிக்கப்படும் தட்டுகளுக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

2.சுற்றுலா பயணளிகளுக்கு ஏதுவான வகையில் 1000 ரூபாய் கீழ் உள்ள ஹோட்டல் அறைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1000-7500 ரூபாய் வாடகைக்கு வரி 12 சதவிகிதமாக குறைத்தும் அதற்கு மேல் வசூலிக்கப்படும் வாடகைக்கு 28%-லிருந்து 18% ஆக குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழச்சி.

3.வேறு இடங்களில் இருந்து தயார் செய்யப்படும் குறிப்பிட்ட வகையிலான ராணுவத் தளவாடங்களுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு.

4. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அன்றாட பயன்படுத்தும் கை பைகள், மற்றும் உடைகளில் உள்ள ஜிப் -ற்கான வரியை 18-லிருந்து 12 சதவிகிதம் குறைத்துள்ளனர்.

5. கிரைன்டருக்கான வரியானது 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

6. ஜி.எஸ்.டி வரி முன்பு 18 சதவிகிதமாக இருந்த காஃபின் சேர்க்கப்படும் பானங்களிற்கு தற்போது 28 சதவிகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பாதாம் பால் மற்றும் பயணிகள் பயணிக்கும் ரயில் பெட்டிகள், சரக்கு பெட்டிகள் ஆகியவைக்கும் 7 சதவிகிதம் கூடுதல் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு 5 சதவிகிதமாக வரி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.