எந்தவொரு தளர்வும் கிடையாது… மே 3ம் தேதி வரை லாக்டவுன்னா லாக்டவுன்தான்….. பீகார் டி.ஜி.பி. எச்சரிக்கை…

 

எந்தவொரு தளர்வும் கிடையாது… மே 3ம் தேதி வரை லாக்டவுன்னா லாக்டவுன்தான்….. பீகார் டி.ஜி.பி. எச்சரிக்கை…

பீகாரில் சமானிய மனிதனுக்கான லாக்டவுன் மே 3ம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எந்தவொரு தளர்வும் கிடையாது என அம்மாநில டி.ஜி.பி. குப்தேஷ்வர் தெரிவித்தார்.

தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று முதல் சில துறைகள் இயங்கும் வகையில் லாக்டவுனை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியது.

லாக்டவுன்

இருப்பினும், கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ள டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஊரடங்கு தளர்த்தப்படாது என அம்மாநில அரசுகள் ஏற்கனவே அறிவித்து விட்டன. இந்த சூழ்நிலையில் பீகாரில் சாமானிய மனிதனுக்கான ஊரடங்கில் தளர்வு கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில டி.ஜி.பி. குப்தேஷ்வர் பாண்டே கூறியதாவது: சுற்றி நிறைய வதந்திகள் உள்ளன. 

ஊரடங்கு பணியில் பீகார் போலீசார்

இன்று (நேற்று) முதல் ஊரடங்கில் எந்தவொரு தளர்வும் கிடையாது என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன். இதுவரை எப்படி இருந்ததோ அதேபோலவை சாமானிய மனிதனுக்கான லாக்டவுன் மே 3ம் தேதி வரை தொடரும். ஒவ்வொருவரும் வீட்டுக்குள் இருங்க. ஊரடங்கில் தளர்வு கிடையாது. மத்திய உள்துறை அமைச்சகம் சில நடவடிக்கைகளை தொடங்க அனுமதி அளித்துள்ளது. அதனால அது தொடர்பான நபர்கள் மட்டும் வீட்டை வெளியே வரலாம். இதனை மனதில் வைத்து சாமானிய மனிதனும் நாமும் வீட்டை விட் வெளியே வரலாம் என சிந்திக்க கூடாது. எந்தவொரு நபரும் காரணம் இல்லாமல் வெளியே வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.