எந்தப்பக்கம் கால்களை நீட்டிப் படுத்தால் உங்களை மரணம் நெருங்கும் தெரியுமா?

 

எந்தப்பக்கம் கால்களை நீட்டிப் படுத்தால் உங்களை மரணம் நெருங்கும் தெரியுமா?

கால்களை ஆட்டாமல் இருக்க வேண்டியதன் அவசியம், பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டியதன் அவசியம் என முன்னோர்கள் கூறிய அனைத்துக்கும் பின்னால் ஓர் அறிவியல் உண்மை இருந்தது

நம் முன்னோர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நியதிகளை விதித்து வைத்திருக்கிறார்கள். அது மூட நம்பிக்கைகள் என நாம் ஆரம்பத்தில் நினைத்தாலும் வளர்ந்து விவரம் தெரிந்த பிறகுதான் அதன் உண்மையான பொருளும், அதற்கு பின்னால் இருக்கும் அறிவியலும் நமக்கு விளங்கும்.

கால்களை ஆட்டாமல் இருக்க வேண்டியதன் அவசியம், பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டியதன் அவசியம் என முன்னோர்கள் கூறிய அனைத்துக்கும் பின்னால் ஓர் அறிவியல் உண்மை இருந்தது. அனைத்துக்கும் வழிமுறைகளை வகுத்த முன்னோர்கள் தூக்கத்திற்கு வகுக்காமல் விட்டிருப்பார்களா என்ன? எந்த திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என்பதில் இருந்து எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என அனைத்துக்கும் வரைமுறைகள் உள்ளன. அதன்படி தூங்கும்போது கதவு இருக்கும் திசையில் கால்களை நீட்டி தூங்குவது உங்களுக்கு மரணவாயிலை திறந்து வைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தூங்கும் நிலைகள் வாஸ்து சாஸ்திரம் மற்றும் பழங்கால சீன ஜோதிடமான பெங் சூயி இரண்டுமே தூங்கும் நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இவற்றை பின்பற்றும்போது உங்களுக்கு ஆரோக்கியமான தூக்கம் கிடைப்பதுடன் ‘சி’ என்னும் நேர்மறை சக்தியையும் உங்களை நோக்கி ஈர்க்கிறது.

sleeping

ஒருவர் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை தூக்கத்திலேயே செலவிடுகிறார்கள். 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை ஒருவர் தோராயமாக தூங்குகிறார். அதாவது உங்கள் உடல் நீண்ட நேரத்திற்கு ஒரே நிலையில் இருக்கிறது. பல மணி நேரம் பல்வேறு செயல்களில் ஈடுபட்ட உங்களின் உடலுக்கு இந்த நீண்ட ஓய்வு மிகவும் அவசியமாகும். இந்த ஓய்வு நேரம் குறையும்போது அது உங்களை உடலளவில் பெரிதும் பாதிக்கும். 

நீங்கள் தூங்கும் இடம் உங்களுக்கு இந்த உலகத்தின் அனைத்து கவலைகளிலும், துன்பங்களிலும் இருந்து சில மணி நேரங்களுக்கு விடுதலை அளிக்கிறது. ஆனால் அனைவருக்கும் அது கிடைப்பதில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. நீங்கள் தூங்கும் இடம் உங்களுக்கு பிடித்த இடமாக இருக்கும்போது அது உங்களுக்கு பலமடங்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

cot

படுக்கையானது எப்போதும் கதவிலிருந்து தூரமாகவே வைக்கப்பட வேண்டும். தூங்கும்போது உங்கள் பாதங்கள் ஒருபோதும் கதவை நோக்கி இருக்கக்கூடாது.

இந்தியர்களின் கலாச்சாரத்தின் படி இறந்த உடல்கள் மட்டுமே இந்த திசையில் வைக்கப்படும். காரணம் நீங்கள் தூங்கும்போது உங்கள் உடல் அதிகளவு ” சி” ஆற்றலை வெளியிடுகிறது. இது உங்கள் உடலுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டிலுமே நிவாரணத்தை வழங்குகிறது.

நீங்கள் கதவை நோக்கி கால் வைத்து தூங்கும் போது அது இந்த நல்ல ஆற்றலை வெளிப்புறம் நோக்கி தள்ளுகிறது. 

death

” சி ” ஆற்றல் உங்கள் உடலின் நேர்மறை ” சி ” ஆற்றல் உங்கள் உடலை தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும் கவசம் போல செயல்படக்கூடியது. நீங்கள் கால்களை கதவை நோக்கி வைத்து தூங்கும்போது உங்கள் உடலுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் தீயசக்திகள் உங்கள் உடலை எளிதில் தாக்கக்கூடும். இது மிகப்பெரிய ஆபத்துக்களை உண்டாக்கும். இறந்தவர்கள் இப்படி படுக்க வைக்கப்பட்டிருக்கும் போது இந்த எதிர்மறை சக்திகள் அவர்கள் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. தூங்கும்போது ஆன்மாவின் நிலை கதவை நோக்கி கால்கள் வைத்து தூங்காமல் இருக்க மற்றொரு காரணமாக கூறப்படுவது என்னவெனில், இரவு நேரத்தில் நாம் தூங்கிய பிறகு நமது ஆன்மாவுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது. இந்த நேரத்தில் நமது உடலில் இருந்து ஆன்மா சற்று விலகி இருக்கும் என்று கூறப்படுகிறது.

death

இந்த சூழ்நிலையில் கால்கள் கதவை நோக்கி இருக்கும்போது நமது உடல் எளிதில் எதிர்மறை சக்திகளால் ஆட்கொள்ளப்படலாம். இதனால் மரணம் கூட ஏற்படலாம். பாத்ரூமின் கதவாக இருந்தாலும் சரி, வரான்டாவின் கதவாக இருந்தாலும் சரி அதனை நோக்கி கால்கள் இருக்கும்படி தூங்கவே கூடாது ஒருவேளை கட்டும்போதே அப்படி தவறாக கட்டிவிட்டால் படுக்கையை போடும் இடம் சரியான இடமாக இருக்க வேண்டும். எதிர்மறை சக்திகள் ஒருபோதும் உங்களை நெருங்க அனுமதிக்காதீர்கள்.