எத்தனை மணிக்கு தேர்தல் முடிவு வெளியாகும்? பிரதமர் பதவி ஏற்பது எப்போது? 

 

எத்தனை மணிக்கு தேர்தல் முடிவு வெளியாகும்? பிரதமர் பதவி ஏற்பது எப்போது? 

தலைமைத் தேர்தல் ஆணையர் 23ம் தேதி நள்ளிரவோ, வெற்றி பெற்ற கட்சி எது என மே 24ம் தேதி காலையிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் 23ம் தேதி நள்ளிரவோ, வெற்றி பெற்ற கட்சி எது என மே 24ம் தேதி காலையிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11ம் தேதி துவங்கி மே மாதம் 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. 23ம் தேதி காலை 8 மணியில் இருந்து வாக்கு எண்ணிக்கைகள் துவங்கும். ஒவ்வொரு தொகுதிக்குமான தேர்தல் அதிகாரி, வேட்பாளர்கள், மற்றும் முகவர்கள் முன்னிலையில் தான் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகள் தான் முதலில் எண்ணப்படும். பின்னர் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 

எந்த கட்சியினர், எந்த தொகுதியில் எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளனர் என்று அறியும் வகையில் காலையில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை இருக்கும். தலைமைத் தேர்தல் ஆணையர் 23ம் தேதி நள்ளிரவோ, வெற்றி பெற்ற கட்சி எது என்பதை மே 24ம் தேதி காலையிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவார். தேர்தல் முடிவுகள் குறித்த தகவல்களை நேரடியாக //results.eci.gov.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். 16வது நாடாளுமன்ற அவை ஜூன் 3ம் தேதியுடன் முடிவுக்கு வர இருப்பதால் அதற்கு முன்பே பிரதமர் பதவி ஏற்பு விழா மற்றும் புதிய ஆட்சி பொறுப்பேற்றல் போன்றவை முடிந்துவிடும். 2014ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நரேந்திர மோடி மே 26 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.