எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? மே 3ஆம் தேதிக்கு பின் ரயில், பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் – ப. சிதம்பரம்

 

எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? மே 3ஆம் தேதிக்கு பின் ரயில், பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் – ப. சிதம்பரம்

கொரோனா பாதிப்பு காரணமாக மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பணிக்கு மட்டுமே எல்லைகள் திறக்கப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பணிக்கு மட்டுமே எல்லைகள் திறக்கப்படுகின்றன. வெளி மாநிலங்களில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு தமிழகம் வந்துகொண்டிருந்த லாரி டிரைவர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். உணவு இன்றி அவதியுறுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் வெளிமாநிலங்களில் உணவு இன்றி ஏராளமான தொழிலாளர்கள் அவதிப்பட்டுவருகின்றனர். 

 

 

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு (migrant persons) அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும். மே 3ஆம் நாளுக்குப் பிறகு அவர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல ரயில்களையும் பஸ்களையும் அரசு அனுமதிக்க வேண்டும்.வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்?” என தெரிவித்துள்ளார்.