எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிடுமோ! இந்தியாவில் சமூக பரவலாக மாறிய கொரோனா..?

 

எது நடக்கக்கூடாதோ அது நடந்துவிடுமோ! இந்தியாவில் சமூக பரவலாக மாறிய கொரோனா..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் சமூக பரவல் நிலையை அடைந்து விட்டதா என்பது உள்ளிட்ட விவரங்களை அறிய விரிவான ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்தவுள்ளது. 

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளிடம் இச்சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோயமுத்தூர், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

test

இத்திட்டப்படி 69 மாவட்டங்களில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட தலா 10 பகுதிகளில் இருந்து வீட்டிற்கு ஒருவர் என்ற வீதத்தில் 400 பேரின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் கிடைக்கும் முடிவுகளை கொண்டு கொரோனா பரவிய விதம் குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. மாவட்ட அளவிலான ஆய்வுகளை தொடர்ந்து மருத்துவமனைகள் அளவிலான ஆய்வை நடத்தும் திட்டம் உள்ளதாக மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது