எதிர்பார்த்த மாதிரி வட்டி விகிதத்தை குறைத்த அமெரிக்க மைய வங்கி

 

எதிர்பார்த்த மாதிரி வட்டி விகிதத்தை குறைத்த அமெரிக்க மைய வங்கி

அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த மாதிரியே அமெரிக்க மைய வங்கி (அமெரிக்க பெடரல் ரிசர்வ்) முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதார பலத்தில் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது அமெரிக்கா. அதனால் அந்நாட்டில் ஏற்படும் எந்தவொரு சின்ன நிகழ்வும் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பொருளாதார நிலவரம் தற்போது கொஞ்சம் தள்ளாட்டம் கண்டு வருகிறது. முதலீடு நடவடிக்கைகள் சுணக்கம் கண்டுள்ளது மற்றும் ஏற்றுமதி பின்னடைவை சந்தித்துள்ளது. 

அமெரிக்க மைய வங்கி

இதனால் பொருளாதாரத்தை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை அமெரிக்க மைய வங்கி குறைக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தனர். அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே நேற்று நடந்த அமெரிக்க மைய வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து முக்கிய வட்டி விகிதம் 2 சதவீதத்தலிருந்து 1.75 சதவீதமாக குறைகிறது.

ஜேரோமி பவுல்

அமெரிக்க மைய வங்கி வட்டி விகிதத்தை குறைப்பு நடவடிக்கை அந்நாட்டின் பொருளாதாரத்தில் நிலையற்றதன்மை நிலவுவதை உறுதி செய்கிறது. இருப்பினும், வட்டி குறைப்பால் நிதிசந்தையில் அதிகளவு நிதி வரும் அதனால் முதலீட்டு நடவடிக்கைகள் விறுவிறுப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மைய வங்கியின் வட்டி குறைப்பு இந்தியா உள்பட சர்வதேச நாடுகளின் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.