எதிர்பார்த்ததுதான்… ஆனால் அடி கொஞ்சம் பெரிசு…. மார்ச்சில் மாருதி சுசுகி விற்பனை கடும் சரிவு…

 

எதிர்பார்த்ததுதான்… ஆனால் அடி கொஞ்சம் பெரிசு…. மார்ச்சில் மாருதி சுசுகி விற்பனை கடும் சரிவு…

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 83,792 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 2019 மார்ச் மாதத்தை காட்டிலும் 47 சதவீதம் குறைவாகும்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில்  கடந்த வார புதன்கிழமை முதல் நாடு முழுவதும்  21 நாட்களுக்கு முடக்கம் நடைமுறையில் உள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. இதனை மாருதி சுசுகி நிறுவனத்தின் கடந்த மார்ச் மாத வாகன விற்பனை புள்ளிவிவரம் உறுதி செய்துள்ளது.

மாருதி சுசுகி இந்தியா கார் மாடல்கள்

நம் நாட்டிநாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது மாருதி சுசுகி இந்தியா. இந்நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 83,792 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 47 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் மாதத்தில் மொத்தம் 1.58 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

மாருதி எஸ் கிராஸ் கார்

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் உள்நாட்டில் மொத்தம் 79,080 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. இந்நிறுவனம் மொத்தம் 4,712 வாகனங்களை ஏற்றுமதி செய்து இருந்தது.