எதிர்பாராத ஆதரவால் இன்ப அதிர்ச்சியில் காங்கிரஸ்!

 

எதிர்பாராத ஆதரவால் இன்ப அதிர்ச்சியில் காங்கிரஸ்!

அரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்களில் எதிர்பாராத அளவுக்கு அதிக இடங்களை வென்றதால் காங்கிரஸ் கட்சி இன்ப அதிர்ச்சியில் உள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்புகளில் பெரும்பாலானவை, பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்கவைத்து கொள்ளும், அதேசமயம் காங்கிரஸ் குறைந்த இடங்களே கைப்பற்றும் என தெரிவித்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் நேற்று கொஞ்சம் வேறுவிதமாக அமைந்து விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

சோனியா காந்தி

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களை கூடுதலாக பெற்றது. இந்த கூட்டணி மொத்தம் 103 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மகாராஷ்டிரா காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர்.

காங்கிரஸ்

அரியானாவில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மொத்தம் 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இது கடந்த சட்டப்பேரவை தேர்தலை காட்டிலும் இந்த முறை காங்கிரஸ் கட்சி 16 இடங்களை கூடுதலாக பெற்றுள்ளது. மக்களின் எதிர்பாராத ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இதில் சோகமான விஷயம் என்னன்னா இந்த தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வென்றபோதிலும் அந்த கட்சியால் ஆட்சி அமைக்க சாத்தியமில்லை என்பதுதான்.