எதிர்க்கும் மாநிலங்களுக்கு அனுமதியில்லை… டெல்லி குடியரசு அணிவகுப்பு பட்டியல் வெளியானது!

எதிர்க்கும் மாநிலங்களுக்கு அனுமதியில்லை… டெல்லி குடியரசு அணிவகுப்பு பட்டியல் வெளியானது!

மத்திய அரசை எதிர்க்கும் மாநிலங்களுக்கு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் இடமில்லை என்பது போல இந்த ஆண்டு பங்கேற்கும் மாநிலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசை எதிர்க்கும் மாநிலங்களுக்கு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் இடமில்லை என்பது போல இந்த ஆண்டு பங்கேற்கும் மாநிலங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

list

டெல்லியில் நடைபெறும் 2020ம் ஆண்டுக்கான குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் மாநிலங்கள் மற்றும் துறைகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஹிமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம், மத்திய பிரதேசம், மேகாலயா, ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் மட்டும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

parade

இதனுடன் மத்திய அரசின் இந்திய தொழில் மற்றும் வர்த்தக துறை, குடிநீர் மற்றும் வடிகால், நிதி சேவைகள், தேசிய பேரிடர் மீட்புப்படை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் அலங்கார ஊர்திகளும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

kerala

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு அளிக்க மறுத்ததுடன் அதை எதிர்த்து தீவிரமாகப் போராடி வரும் மேற்கு வங்கத்துக்குக் குடியரசுதின அணிவகுப்பில் இடம் இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திய கேரளாவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பீகார், மகாராஷ்டிரா, ஹரியானா உள்பட பல மாநிலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.