எதிர்கட்சிகள் அரிசி கொண்டுவரட்டும், ரஜினி உமி எடுத்து வருவார், பிறகு ஊதிஊதி சாப்பிடுவோம்

 

எதிர்கட்சிகள் அரிசி கொண்டுவரட்டும், ரஜினி உமி எடுத்து வருவார், பிறகு ஊதிஊதி சாப்பிடுவோம்

இந்தா இந்த தேர்தலுக்கு வந்திருவார், இல்லயில்ல அடுத்த தேர்தலுக்கு கண்டிப்பா வந்திருவார்னு அவரோட ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்க, காத்திருந்த கண்கள் முதலில் பூத்தன, பிறகு கண்ணாடி போட்டுக்கொண்டன, இறுதியில் பல ஒரேயடியாக கண்ணையே மூடிக்கொண்டன

ரஜினியின் அரசியல் ஆசை வெளிப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு, லேட்டாக அரசியலுக்கு என்ட்ரி தந்த விஜயகாந்த், கட்சி ஆரம்பித்து, எம்.எல்.ஏவாகி, ஆளுங்கட்சிக்கு குடைச்சல் குடுத்து, பிறகு ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்து, கடைசியாக இப்போது வி.ஆர்.எஸ். வாங்கும் நிலைக்கே வந்துவிட்டார். ஆனால், ரஜினி மட்டும் இன்னும் என்ட்ரி கூட தரவில்லை.

rajini -thamilaruvi maniyan

இந்தா இந்த தேர்தலுக்கு வந்திருவார், இல்லயில்ல அடுத்த தேர்தலுக்கு கண்டிப்பா வந்திருவார்னு அவரோட ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்க, காத்திருந்த கண்கள் முதலில் பூத்தன, பிறகு கண்ணாடி போட்டுக்கொண்டன, இறுதியில் பல ஒரேயடியாக கண்ணையே மூடிக்கொண்டன. ஒருவழியாக கட்சி ஆரம்பிக்கும் அறிவிப்பை வெளியிட்ட ரஜினி, அதன்பிறகு மாதக்கணக்கில் சைலன்ட் மோடுக்கு போய்விட்டார்.

thamilaruvi maniyan

இதற்கிடையில் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு அணிலாக இருக்க ஆசைப்பட்டவர்களில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண‌ மற்றும் தமிழருவி மணியனும் முக்கியமானவர்கள். இதில் தமிழருவி மணியன் டக்கர் அடித்துப் பார்க்கிறார். ஆனாலும் ஒன்றும் நடப்பதாக தெரியவில்லை. இந்நிலையில், இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன், ரஜினியின் அரசியல் கட்சி துவங்குவது குறித்து ஒரு லட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து எண்ணூற்று பதிமூன்றாவது முறையாக பேட்டி அளித்திருக்கிறார். “அதிமுக ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ, அன்றுதான் அரசியலுக்கு ரஜினி வருவார்”. அதாவது. மற்ற கட்சிகள் எல்லாம் பாடுபட்டு உழைத்து அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருமாம், அதன்பிறகு ரஜினி நோகாமல் நோம்பு கும்பிட்டு கட்சி ஆரம்பிப்பாராம்.