எதற்காக பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறோம்?

எதற்காக பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறோம்?

அப்பனே.. விநாயகா.. இந்த காரியம் மட்டும் கைகூடட்டும்… சிதறு தேங்காய் உடைத்து உன்னை வழிபடுகிறேன்’ என்று சிலர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்திருக்கிறோம். சிதறு தேங்காய் உடைப்பதற்கும், விநாயகருக்கும் என்ன சம்பந்தம்? ஏன் விநாயகருக்கு மட்டும் விசேஷமாய் சிதறு தேங்காய் உடைக்கிறோம்?

coconut

விக்நேஸ்வரர், தம் தந்தையான சிவனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று ஒருமுறை கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால் தான் மகா கணபதிக்கு பிடிக்கும்.
அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத் தான், ஈஸ்வரனைப் போலவே மூன்று கண்களை உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும் படியாக ஈசுவரன் அனுக்கிரகித்து இருக்கிறார்.

lord vinayagar

சிதறு தேங்காய் என்று உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அம்ருத ரசமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறு தேங்காய் உணர்த்துகிறது. அதன் பின் தேங்காயின் உள்ளே இருக்கும் வெண்மையைப் போல தூய்மையான நம் மனதைக் காட்டுகிறது.