எண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…! என்னய்யா சொல்றீங்க!?

 

எண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…! என்னய்யா சொல்றீங்க!?

எண்ணெய் இல்லாமல் இப்பல்லாம் சமையலே கிடையாது என்கிற அளவுக்கு சமையலில் எண்ணெயை பயன்படுத்தும் போக்கு ரொம்பவே அதிகமாகிடுச்சு! என்னதான் செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெய்யாக இருந்தாலும் அளவுக்கு அதிகமா சேர்ப்பது கூடாது.

எண்ணெய் இல்லாமல் இப்பல்லாம் சமையலே கிடையாது என்கிற அளவுக்கு சமையலில் எண்ணெயை பயன்படுத்தும் போக்கு ரொம்பவே அதிகமாகிடுச்சு! என்னதான் செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெய்யாக இருந்தாலும் அளவுக்கு அதிகமா சேர்ப்பது கூடாது.

எண்ணெய் இல்லாமல் சமைக்ககூடிய  ‘நான்ஸ்டிக் தவா’வில் சமைக்கிறது வேற!இந்த சிக்கன் ரெசிப்பியின் சிறப்பே ஆயிலின் அருகில் கூட போகாமலே சமைக்கப்படுவதுதான்.

தேவையான பொருள்கள்

சிக்கன் லெக் பீஸ் 4
அரைக்க
பட்டை ½ இஞ்ச் 
கிராம்பு 3
ஜாதிபத்திரி ஒரு துண்டு
மராத்தி மொக்கு பாதி
ஏலக்காய் 2
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் 15
பூண்டுப்பல் 10
இஞ்சி ஒரு துண்டு

கலக்க

chicken

 
எலுமிச்சம் பழம் 1
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
தேவையான அளவு உப்பு
பால் எடுக்க,தேங்காய் மூடி 1

அரைக்க கொடித்துள்ள அனைத்தையும் மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி,அதில் எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து,அத்துடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.

இப்போது,சிக்கன் லெக் பீஸ்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து,கத்தியால் அங்கங்கே கீறி விடுங்கள்.இப்போது லெக் பீஸ்களை கலக்கி வைத்திருக்கும் மசாலாவில் நன்றாக புரட்டி எடுங்கள்.இப்போது சிக்கணை குறைந்தது இரண்டுமணி நேரமாவது அந்த மசாலாவில் ஊற வையுங்கள்.நேரம் கூடக்கூட சுவை கூடும்.காலையில் மசாலாவில் புரட்டி ஃப்ரீஸரில் வைத்து இரவு எடுத்து சமைத்தால் இன்னும் சுவை கூடும்.

சிக்கன்

அடுத்தது,அந்தத் தேங்காய் மூடியைத் துருவி பால் எடுங்கள்.அதிகம் தண்ணீர் சேர்க்காமல் திக்கான தேங்காய்ப்பால் வேண்டும்.கடையாக,அடிப்பாகம் தட்டையான ஒரு கடாயை  எடுத்து அடுப்பில் வையுங்கள்.கடாய் சூடானதும் அதில் தேங்காய் பாலை ஊற்றுங்கள்.தேங்காய் பால் கொதிக்க துவங்கும் போது அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு சிக்கன் துண்டுகளை எடுத்து தேங்காய் பாலில் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வைத்து 5 நிமிடம் மூடிவைத்து வேக விடுங்கள்.

அப்புறம் மூடியைத்திறந்து சிக்கனைப் புரட்டிப்போட்டு மூடி மேலும் 5 நிடம் வேகவிடுங்கள். தேங்காய் பாலில் இருக்கும் எண்ணையிலேயே சிக்கன் வெந்து செமி கிரேவியுடன் இருக்கும். ட்ரையாக வேண்டு மென்றால் மூடியை எடுத்துவிட்டு மேலும் ஒரு 5 நிமிட நேரம் அருகில் நின்று புரட்டிவிட்டுக்கொண்டு இருந்தால் எண்ணையே சேர்க்காத சிக்கன் லெக்பீஸ் தயார்.