எடையை குறைக்க வேண்டுமா.. அப்ப தம் அடிங்க! மாணவர்களுக்கு அறிவுறுத்திய பள்ளி!!

 

எடையை குறைக்க வேண்டுமா.. அப்ப தம் அடிங்க! மாணவர்களுக்கு அறிவுறுத்திய பள்ளி!!

எடையை குறைக்க வேண்டுமா.. அப்ப தம் அடிங்க! மாணவர்களுக்கு அறிவுறுத்திய பள்ளி!!

ஆஸ்திரியாவிலுள்ள பள்ளி ஒன்று மாணவர்களை புகைப்பிடிக்க அறிவுறுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. 

வியன்னா நகரில் உள்ள நடனப் பள்ளி ஒன்று, மாணவர்களின் எடையைக் கட்டுக்குள் வைக்கப் புகைபிடிக்கும்படி ஆலோசனை கூறியுள்ளது. அத்துடன் அந்த பள்ளியில் நடனம் பயிலும் மாணவர்கள் பாலியல் ரீதியாகவும் மன ரீதிகாவும் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது இளம் நடனக்கலைஞர்கள், உடலமைப்பு குறித்துக் கேலி செய்யப்படுவதாகவும், ஒழுங்காக நடனம் ஆடவில்லை என்றால் அடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பள்ளியில் நடனம் பயிலும் மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் நகங்களால் கீறியும், முடிகளைப் பிடித்து இழுத்தும் சித்தரவதைப் படுத்தியுள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் பள்ளி மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.  

நடனம்

இந்த சர்சைக்கு பிறகு மாணவர்களுக்குச் சத்துணவு பற்றியும் உடல்நலத்தைப் பேணிக்காப்பது குறித்தும் கற்றுக்கொடுக்கப்படுவதாகப் பள்ளி  நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மாணவர்களுக்கு மனநல நிபுணர்கள் ஆலோசனை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.