எடுபடாத மோடியின் படம்!

 

எடுபடாத மோடியின் படம்!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் “பிஎம் நரேந்திர மோடி” வசூலில் கோட்டையிழந்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் “பிஎம் நரேந்திர மோடி” வசூலில் கோட்டையிழந்துள்ளது.

ஏப்ரல் 12 ல் வெளியாவதாக இருந்த இந்த படம் அப்போது தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தடை செய்யப்பட்டது. தற்போது அனைத்து தேர்தல்களும் முடிந்து, தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட பிறகு, நேற்று படம் ரிலீஸானது.  உலகம் முழுக்க அமெரிக்கா, லண்டன், மலேசியா என் மொத்தம் 38 நாடுகளில் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகியுள்ளார். இதனால் அவருடைய கட்சி தொண்டர்கள் ஆரவார களிப்புடன் உள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் வெளியான மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் எதிர்பார்த்த அளவு வெற்றியில்லை என தகவல் வெளியாகியுள்ளது. விவேக் ஒபராய் நடிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததாகவும் தெரிகிறது. இப்படம் இந்தியா முழுவதும் வெளியானது. இருப்பினும் தற்போது வரை வசூல் செய்தது ரூ. 2.88 கோடிதான். பலரும் இந்த படம் 5 கோடி வரை வசூலை அள்ளும் என எதிர்பார்த்திருந்தனர்.