எடப்பாடி வெளிநாட்டில் ஜாலி… அதிகாரிகள் ஸ்டார் ஹோட்டலில் சோளி..!

 

எடப்பாடி வெளிநாட்டில் ஜாலி… அதிகாரிகள் ஸ்டார் ஹோட்டலில் சோளி..!

எடப்பாடி வெளிநாட்டுக்கு போய் ஜாலியாக சுற்றுகிறார் என்றால் கோட்டை வட்டார அதிகாரிகள் உள்ளூரில் ஜாலியாக சுற்றுகிறார்கள். ஆக மொத்தத்தில் எல்லாம் ஜாலி மயம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு போய் கோட்டு சூட்டு போட்டு சுற்றி வருகிறார். அவருடன் சில அமைச்சர்களும் போயிருக்கிறார்கள். 

 சில அமைசர்கள் தங்கள் துறை மற்றும் தொகுதியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு போய் விட்டார்கள். முக்கிய அதிகாரிகள் யாரும் கோட்டையில் இல்லை. இதனால் சில அதிகாரிகள், ஊழியர்களை பார்க்க அவர்களது நண்பர்கள் கோட்டைக்கு அழைத்து வந்து அலுவலகத்தில் அமர்ந்து டீ, ஜூஸ் குடித்துவிட்டு ஜாலியாக பேசிவிட்டு செல்கிறார்கள்.edappadi palanisamy

அதிகாரிகளிடம் செல்வாக்குள்ள கரைவேட்டிகள் மட்டும் வழக்கம்போல வந்து காரியத்தை சாதித்துவிட்டு மொய் எழுதிவிட்டு செல்கிறார்கள். அவர்களும் சும்மா தானே இருக்கீங்க வாங்க காலார நடந்துட்டு வரலாம்னு அழைத்து வந்து விடுகிறார்கள். அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஹாயாக ஒரு காபி குடித்துவிட்டு மீண்டும் காரிலேயே கோட்டைக்கு வந்துவிடுகிறார்கள். சில அதிகாரிகள் மதிய உணவுக்கு பிறகுதான் கோட்டைக்கே வருகிறார்கள். கீழ் நிலை அதிகாரிகள் மட்டும் தினமும் வந்து வழக்கமான பணிகள் இல்லாத காரணத்தால் பழைய பைல்களை தூசுதட்டி ஏதோ வேலை பார்க்கிறார்கள்  அவ்வளவு தான்.

ஆக எடப்பாடி வெளிநாட்டுக்கு போய் ஜாலியாக சுற்றுகிறார் என்றால் கோட்டை வட்டார அதிகாரிகள் உள்ளூரில் ஜாலியாக சுற்றுகிறார்கள். ஆக மொத்தத்தில் எல்லாம் ஜாலி மயம்.