’எடப்பாடி வெளிநாட்டில் இருந்து வரட்டும்…’ கச்சேரி வைக்கக் காத்திருக்கும் ஓ.பி.எஸ்..!

 

’எடப்பாடி வெளிநாட்டில் இருந்து வரட்டும்…’ கச்சேரி வைக்கக் காத்திருக்கும் ஓ.பி.எஸ்..!

‘‘வெளிநாட்டில் இருந்து முதல்வர் எடப்பாடி சென்னை திரும்பியவுடன் இந்த பிரச்னை குறித்து பேசிக் கொள்ளலாம். அதுவரை அமைதியா இருங்க…’’ என ஓ.பி.எஸ் தரப்பு கூறியிருக்கிறது.

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் இந்நாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. 

அந்த இரு தரப்பினரும் திண்டுக்கல் அங்கு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட்டு கடுமையாக மோதிக்கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு எல்லாம் போடப்பட்டு இருந்தது. தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சரின் அணியை சேர்ந்தவரே வெற்றி பெற்றார். தோல்வியடைந்த ஆத்திரத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள், தேர்தலில் முறைகேடு எனக் குமுறி விட்டார்கள்.

 இது ஒருபுறமிருக்க வெற்றி பெற்ற இந்நாள் அமைச்சரின்  ஆதரவாளர்கள், மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் வாழ்த்தி போஸ்டர்களை ஒட்டியிருந்தார்கள். மருந்துக்கும் ஓ.பி.எஸை பாராட்டி போடவில்லை.

 தகவலறிந்த நத்தம் விஸ்வநாதனின்  ஆதரவாளர்கள்  போஸ்டர்களை ஓபிஎஸ், அவரது மகனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி குமுறி இருக்கிறார். மாவட்டத்தில் மற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் பதவிகளை கைப்பற்றவும் உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள்.  ‘‘வெளிநாட்டில் இருந்து  முதல்வர் எடப்பாடி சென்னை திரும்பியவுடன் இந்த பிரச்னை குறித்து பேசிக் கொள்ளலாம். அதுவரை அமைதியா இருங்க…’’ என ஓ.பி.எஸ் தரப்பு கூறியிருக்கிறது.  ஆனாலும், முன்னாள் – இந்நாள் மோதல் எப்போது பூதாகரமாக  வெடிக்கப்போகிறது எனத் தெரியவில்லை என அதிமுக வட்டாரத்த்தில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.