எடப்பாடி பழனிசாமியைக் கண்டு கொரோனா பயப்படுகிறது! – ராஜேந்திர பாலாஜி வைத்த ஐஸ்

 

எடப்பாடி பழனிசாமியைக் கண்டு கொரோனா பயப்படுகிறது! – ராஜேந்திர பாலாஜி வைத்த ஐஸ்

சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து பேசி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. வன்முறை பேச்சு, இந்து, முஸ்லிம் என்று பிரித்து பேசுவது, ஊழல் என்று இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் பத்திரிகையாளசிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து பேசி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. வன்முறை பேச்சு, இந்து, முஸ்லிம் என்று பிரித்து பேசுவது, ஊழல் என்று இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவரை மிகக் கடுமையாக தாக்கி, பிரிவினையைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்ததால் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு டம்மியாக்கப்பட்டார் ராஜேந்திர பாலாஜி. ர் ஒருவரை மிகக் கடுமையாக தாக்கி, பிரிவினையைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்ததால் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு டம்மியாக்கப்பட்டார் ராஜேந்திர பாலாஜி. 

உலகமே பயப்படும் கொரோனா, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டு பயப்படுகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து பேசி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. வன்முறை பேச்சு, இந்து, முஸ்லிம் என்று பிரித்து பேசுவது, ஊழல் என்று இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவரை மிகக் கடுமையாக தாக்கி, பிரிவினையைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்ததால் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு டம்மியாக்கப்பட்டார் ராஜேந்திர பாலாஜி. 

rajendra-balaji-78

அது முதல் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசி, எப்படியாவது கட்சியில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெற்றுவிடும் முனைப்போடு செயல்பட்டு வருகிறார் ராஜேந்திர பாலாஜி. வழக்கமாக பேட்டி அளிக்கும் ராஜேந்திர பாலாஜி, தற்போது மீடியாக்களை சந்திப்பது இல்லை. திடீரென்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்காக ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை கலெக்டர் கண்ணனிடம் வழங்குவதற்காக ராஜேந்திர பாலாஜி வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, “தமிழ்நாட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

rajendra-balaji-78

மருத்துவர்கள் கடவுளின் தொண்டர்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு நிவாரண உதவி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தியுள்ளார்.
ஊரடங்கு ஒரு மாதம் கடைபிடிக்கும் நிலையில் இதுவரை எந்த ஒரு அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டு ஏற்படவில்லை. அந்த அளவுக்கு மக்களைப் பாதுகாத்து வருகிறது தமிழக அரசு. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸே அச்சப்படும் வகையில் வெளிப்படையான நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்” என்று கூறினார்.