எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிசை, ஓம் பிர்லா பிறந்த நாள் வாழ்த்து

 

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிசை, ஓம் பிர்லா பிறந்த நாள் வாழ்த்து

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தன்னுடைய 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தன்னுடைய 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

eps-and-tamilisai

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “
தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நலமும் வளமும் பெற பிரார்த்திப்பதோடு தங்களின் மகத்தான மக்கள் சேவை தமிழ்நாடு மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிகோலும் என உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.