எடப்பாடி ஊரில் இல்லாத நேரமாகப் பார்த்து இரண்டாவது மகனை களத்தில் இறக்கிய ஓ.பி.எஸ்.!

 

எடப்பாடி ஊரில் இல்லாத நேரமாகப் பார்த்து இரண்டாவது மகனை களத்தில் இறக்கிய ஓ.பி.எஸ்.!

தர்மயுத்தத்துக்கு மட்டும் இனி ஜெ.சமாதிக்குச் சென்றால் சரியாக இருக்காது என முடிவெடுத்த பன்னீர்செல்வம், தனது இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்திருப்பதாக செய்திகள். நல்லது. ஆனால், பூங்குன்றன் ஜெ.சமாதிக்குச் சென்றதும், மலர் அலங்காரம் செய்ய ஓ.பி.எஸ். தரப்பில் ஆட்கள் சடுதியில் வேலை செய்வதும் எடப்பாடியார் வெளிநாட்டில் இருக்கும்போது நடப்பதுதான் சற்றே நெருடலாக உள்ளது.

ஜெயலலிதா இறந்து இரண்டரை ஆண்டுகள் ஓடிவிட்டன. கருணாநிதி இறந்து சரியாக ஒருவருடம் முடிந்திருக்கிறது. இருவரது சமாதியும் 50 மீட்டர் இடைவெளியில் இருக்கிறது. முன்னவர் ஆளுங்கட்சியாக, முதல்வராக இருந்து மரித்தார். பின்னவர் எதிர்கட்சி எம்.எல்.ஏ.வாக மரித்தார். முன்னவரின் சமாதியில் தீபா தரப்பிலும், ஓ.பி.எஸ். தரப்பிலும் அவ்வப்போது நடத்தும் தர்மயுத்தத்தின்போது மட்டும் மலரலங்காரம் ஜொலிக்கும். கருணாநிதியின் சமாதியில் நாளொரு டிசைனும் பொழுதொரு பூவுமாக இன்னமும் களைகட்டியிருக்கிறது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால், இந்த இரண்டரை ஆண்டுகளில் அதிமுக ஜெ.சமாதி மலரங்காலத்திற்கு செய்த செலவை, திமுக ஒரு வாரத்திற்குள் செய்திருக்கும். பொதுமக்கள் இதனை பார்க்கும்போது, கட்சியின் உண்மையான தொண்டர்கள் பார்க்கமாட்டார்களா என்ன?

OPS family with Jayalalitha

பார்த்துவிட்டார் பூங்குன்றன். எந்த பூங்குன்றன்? யார் கைக்கு நம்மை பற்றிய மொட்டை கடுதாசி போய்விடக்கூடாது என அல்லும்பகலும் ஓ.பி.எஸ்ஸும். இ.பி.எஸ்ஸும், ஏன் ஒட்டுமொத்த கட்சியினரும் பயந்துபோயிருந்த ஜெ.வின் தனிச்செயலர் அதே பூங்குன்றன்தான். ஒரு சில நாட்களுக்கு முன்பு ஜெ.சமாதிக்குச் சென்ற பூங்குன்றன், முறையான பராமரிப்பு இல்லாத ஜெ.சமாதி குறித்து கண்ணீருடன் போஸ்ட் ஒன்றை ஃபேஸ்புக்கில் போட்டார். போஸ்ட் அப்லோட் ஆகி முதல் ஒரு சில லைக்குகள் விழுவதற்குள் எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை, மலரலங்காரத்தில் ஜெ.சமாதியை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். திரும்பவும் நன்றி போஸ்ட் ஒன்றைப் போட்டார் பூங்குன்றன். சரி, மக்களும் தொண்டர்களும் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள், தர்மயுத்தத்துக்கு மட்டும் இனி ஜெ.சமாதிக்குச் சென்றால் சரியாக இருக்காது என முடிவெடுத்த பன்னீர்செல்வம், தனது இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்திருப்பதாக செய்திகள். நல்லது. ஆனால், பூங்குன்றன் ஜெ.சமாதிக்குச் சென்றதும், மலர் அலங்காரம் செய்ய ஓ.பி.எஸ். தரப்பில் ஆட்கள் சடுதியில் வேலை செய்வதும் எடப்பாடியார் வெளிநாட்டில் இருக்கும்போது நடப்பதுதான் சற்றே நெருடலாக உள்ளது.